(878)

(878)

புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்

கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்

தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா

சிலையினா லிலங்கை செற்ற  தேவனே தேவனாவான்.

பதவுரை

கலை

–

சாஸ்திரங்களை
அற கற்ற மாந்தர்

–

நன்றாக ஓதின மனிதர்
புலை அறம் ஆகிநின்ற

–

நீச தர்மமாயிராநின்ற
புத்தொடு சமணம்

–

பௌத்தமதம்   க்ஷபணமதம் முதலிய
எல்லாம்

–

எல்லா மதங்களையம்
காண்பரோ

–

நெஞ்சாலே தான் ஆராய் வார்களோ?
கேட்பரோ

–

காது கொடுத்துத்தான் கேட்பார்களோ?

(அதுநிற்க)

தலை அறுப்புண்டும்

–

என் தலையானது அறுக்கப்பட்டாலும்
சாகேன்

–

நான் சாகமாட்டேன்;
சத்தியம்

–

இது சத்தியம் ;
ஐயா

–

ஸ்வாமிகளே!
காண்மின்

–

(ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்;
சிலையினால்

–

வில்லாலே
இலங்கைசெற்ற

–

இலங்கையை நாசஞ்செய்த
தேவனே

–

எம்பெருமானே
தேவன் ஆவான்

–

ஸர்வேச்வரனெனப்படுவான் .

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும், “புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும் எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்?  ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிராநின்றது;  அன்றியும்  “தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவதுதென்று தெரியவில்லை;  நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்;  எங்கள் மீது குற்றமென்?” என்று சில ஸம்ஸாரிகள் கூற, அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித்தருகிறார்.

புத்தொடு – புத்தமென்ற வடசொல் புத்து எனத் திரிந்தது.  சமணம் -க்ஷபணகருடைய மதம்.  கலையறக்கற்ற மாந்தராவார் -கூரத்தாழ்வான் போல்வார் .  “ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸங்களில் நிலைநின்றவர்களாய் வேததாத்பர்யம்  கைப்பட்டவர்கள்;  அவர்களாகிறார்- கூரத்தாழ்வான் போல்வாரிறே”!   என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

“காண்பரோ கேட்பரோதான்” என்றவிடத்தில் ஓர் ஐதிஹ்யம் அருளிச்செய்வர்;- கூரத்தாழ்வான் “இஸ்டஸித்தி” என்கிற ஒரு புறமதச்சுவடி வாசித்துக்கொண்டிருந்த சிலரோடே கூடிச்சிறிது போதுபோக்கி எம்பெருமானார் ஸந்நிதிக்கு விளம்பித்துவர, “ஏன் இத்தனை விளம்பம்?” என்று உடையவர் கேட்டருள, ஆழ்வானும் காரணத்தை உள்ளபடியே உரைக்க, உடையவர் “   ஹா ஹா!‘கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதான்’ என்ற அருளிச்செயல் என்னாயிற்று?” என்று புநஸ்ஸ்நாநம் செய்வித்தருளி ஸ்ரீபாததூளியும் இடுவித்தருளினாராம்.

தலையறுப்புண்டும் -ஸத்யமான வார்த்தையை நான் சொல்லிக்கொண்டே கழுத்தில் கத்தியை எரிந்தேனாகில் தலை அறுபடமாட்டாது ஸத்யம் ;  ஒருகால் தலை அறுப்புண்டாலும் உயிர் போகாதென்பது புநஸ்ஸத்யம் .

சாவேன், சாகேன் என்பன பாடபேதங்கள்.

English Translation

The tenets of all the lowly, heretic cults – will the learned men of Sastras hear or see these? See, O Sirs! Even if you cut my head, I will not die, I swear. The Lord who destroyed Lanka with a bow, alone is Lord of all.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top