(816)

(816)

நிற்பதும்மொர் வெற்பகத்தி ருப்பும்விண்கி டப்பதும்

நற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்

அற்புதன னந்தசயன னாதிபூதன் மாதவன்

நிற்பதும்மி ருப்பதும்கி டப்பதும்என் நெஞ்சுளே.

பதவுரை

அற்புதன்

(ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும்
அனந்த சயனன்

அரவணைமேற் பள்ளி கொள்பவனும்
ஆதிபூதன்

ஜகத்காரணபூதனும்
மாதவன்

ச்ரியாபதியுமான பெருமான்
ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண்

விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே
இரும்பும்

வீற்றிருப்பதும்
நல் பெருதிரை கடலுள் கிடப்பதும்

நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும்,
நான் இலாத முள் எலாம் :

நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்)

நிற்பதும்  இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சனே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய திருவுள்ளத்தினின்றும் எம்பெருமான் பேராமல் இங்கேயே ஸ்தாவாப்ரதிஷ்டையாயிருக்கிற இருப்பிலே மிகவும் ஈடுபட்டு, எம்பெருமான் திருவேங்கட மலையில் நிற்பதும் திருநாட்டிலே இருப்பதும் திருப்பாற்கடலிலே கிடப்பதுமெல்லாம் தன்னோடுண்டான முறையை அறியாதே நான் அஸத்கல்பனாயிருந்த காலத்திலேயாம்: நான் முறையறிந்து பரிமாறினபின்பு அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் எனது நெஞ்சினுள்ளே யாய்த்து என்கிறார். (சுடு)

English Translation

His standing on the hill so high, His sitting in the sky above, His sleeping in the ocean-deep, was all before the Self was born. The wonder-Lord the first-cause Lord, the Lord who sleeps eternally, His standing, sitting, reclining — all the acts are in my heart.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top