(743)

(743)

செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி

வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றிகொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை

தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே.


பதவுரை

செவ்வரி நல் கரு நெடு கண்

(உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய
சீதைக்கு ஆக

வநிதையை மணம்புரிதற் பொருட்டு
சினம் விடையோன்

கோபத்தையுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய
சிலை இறுத்து

வில்லை முறித்து (பின்புமிதிலா புரியினின்று மீளும் வழியில்)
மழுவாள் ஏந்தி

கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய
வெவ் வரி நல் சிலை

பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
வாங்கி

கையிற்கொண்டு (வளைத்து)
வென்றி கொண்டு

(அவனை) வென்று
வேல் வேந்தர் பகை தடித்த

(தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த
வீரன் தன்னை

மஹாவீரனான
தெவ்வர்

பகைவர்கள்
அஞ்சு

(கண்டமாத்திரத்திலே, கடக்கவொண்ணாதென்று) அஞ்சும் படியான
நெடு புரிசை

உயர்ந்த மதிளையும்
உயர்ந்த பாங்கர்

ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய

தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்

(எழுந்தருளியிருக்கிற)

எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை

(வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்) பயங்கரமுமான வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமபிரானை
இறைஞ்சுவார்

வணங்குகிற அடியார்களுடைய
இணை அடியே

இரண்டு திருவடிகளையே
இறைஞ்சினேன்

வணங்கினேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாபன்காமடிமில் எவ்வரி என்றே நாடெங்கும் ஓதுவர். அப்பாடத்துக்கு ஏவரி என்பது எவ்வரியென்று விகாரப்பட்டதெனக்கொண்டு ஏ-அம்பு தொடுப்பதற்கு உரிய வரி – நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும், வேறொருத்தரால் அடக்கியாள வொண்ணாதே காணவே ப்ரதிபக்ஷம் முடியும்படியான ஸ்ரீசார்ங்கம். என்ற வியாக்கியானத்திற்கு அப்பாடம் சேராது. எவ்வரு என்றோதுவதே சிறக்கும். ஏவரு என்பது எதுகை நோக்கி எவ்வரு எனக்குறுக்கலும் விரித்தலுமாகிய விகாரங்களை யடைந்தது ஏவு-ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று. (இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே) இராமனுக்கு அடியவனான பரதனுக்குஅடிமை பூண்டொழுகின சத்ருக்நன் போலப் பாகவத தாஸனாக வேண்டுமென அவாவுகின்றார்.

English Translation

For the love of the dark-eyed Sita, he broke the Siva-Dhanush, then victoriously took the bow from the axe-wielder and drove away the sworn enemy-of-kings Parasurama. The brave Raina with strong arms that wield a heavy bow resides in Tillainagar Tiruchitrakutam surrounded by high masonry walls that enemies fear. I worship the feet of those who worship him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top