(742)
வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே.
பதவுரை
| வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி |
– |
செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து |
| வரு குருதி பொழிதர |
– |
ரத்தம் வெளிவந்து சொரியம் படி |
| வல் கணை ஒன்று ஏவி |
– |
வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி |
| மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து |
– |
எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட வேதங்களின் வழியே விச்வாமித்ர மஹாமுநி செய்த யாகத்தைப் பாதுகாத்து |
| வல் அரக்கர் |
– |
(அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய |
| உயிர் கண்ட |
– |
உயிரைக் கொள்ளை கொண்ட |
| மைந்தன் |
– |
மிடுக்கையுடையவன் (யாரென்னில்) |
| செம் தளிர்வாய் மலர் |
– |
சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களையுடையதும் |
| நகை சேர் |
– |
(காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும் |
| செழு |
– |
செழுமையை யுடையதுமான |
| தண் |
– |
குளிர்ந்த |
| சோலை |
– |
சோலைகளையுடைய |
|
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்; |
||
| அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த |
– |
ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க) |
| அணி மணி ஆசனத்து இருந்த |
– |
அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த |
| அம்மான் தானே |
– |
ஸர்வேச்வரனே யாவன்; |
| காண்மின் |
– |
அறியுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விச்வாமித்ர முனிவன் தனது வேள்வியைக் காக்கும்பொருட்டு தசரத சக்கரவர்த்தியினிடம் அநுமதி பெற்று இராமபிரானை இளையபெருமாளுடன் அழைத்துக்கொண்டு போனபொழுது அம்முனிவ னாச்ரமத்திற்குச் செல்லும் வழியிடையே மிக்க செருக்குடன் வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவனது கட்டளைப்படி பெண்ணென்று பாராமற் போர்செய்து கொன்றது மன்றி, பின்பு முனிவன் செய்த யாகத்தில் தீங்குவிளைக்க வந்த ஸுபாஹூ முதலிய பல அரக்கர்களையுங் கொன்று மாரீசனை வாயவ்யாஸ்தரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டு யாகத்தை நிறைவேற்றுவித்தனன் என வரலாறு அறிக.
(அந்தணர்கள் ஒரு மூவாயிரவர்.) நாங்கை நாலாயிரம் தில்லை மூவாயிரம் என்ற ப்ரஸித்தி காண்க. மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காயசோதித், தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரக்கூடஞ்சென்று சேர்மின்களே என்றார் திருமங்கையாழ்வாரும்.
English Translation
Light of the world shining from the good city of Ayodya surrounded by lofty walls! Beacon of the lineage of kings, of the Solar Race! Hero and savior of all the celestials! Lord of lotus eyes and dark frame! Our very own Lord without a peer! He resides in the good Chitrakuta of Tillainagar. When, O when will my eyes feast on his form?
