(736)

(736)

பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல்

காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி

ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல்

தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே விசிட்டனே சொல்லீர் நீரே

பதவுரை

தூ மறையீர்

நித்ய நிர்த்தோஷமான வேதத்ததை ஓதியிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே

(ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே

ராஜதர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே

(உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)

பூ மருவும் நறு குஞ்சி

புஷ்பம்மாறாதே யிருப்பதாய் மணம் கமழாநின்ற திருக்குழலை
புன் சடை ஆ புனைந்து

விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல்

நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து

காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது

திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி

இயற்கையழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான்

ஸுரக்ஷிதமான தோள்களையுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல்

நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ

தகுதிதானோ!
நீரே சொல்லீர்

(தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நல்ல புஷ்பங்களைச் சூடிப் பரிமளம் விஞ்சக்கடவதான திருக்குழலைச் சடையாகத் திரித்தும், நான் அறுபதினாயிரமாண்டு அரசாண்டு ஸம்பாதித்து வைத்திருக்கம் பட்டுப் பீதாம்பரங்களில் நல்லவற்றைச் சாத்தக்கடவதான திருவரையில் விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தியும், இயற்கையான அழகுக்கு மேலே செயற்கையழகுக்காக ஆபரணங்களைச் சாத்த வேண்டிய அவயங்களில் அவற்றைச் சாத்திக் கொள்ளாமலும் அந்தோ! என் மைந்தன் காட்டுக்குச் சென்றனனே! ஐயோ! இக்காடு இந்தவயதில் அவனுக்குச் செல்லகூடியதா? அறுபதினாயிரமாண்டு போகங்களை புஜீத்துப் பல்விழுந்து தலைநரைத்து உடலிளைத்து உடை குலைப்பட்ட நான் இன்று போகக்கூடியதான காட்டிற்கு எனது மைந்தன் செல்கிறானே இது என்ன அநியாயம். தர்மங்களை அறிந்தும் அநுஷ்டித்தும் உபதேசித்தும் போருகிற மஹாநுபாவர்களே இது நியாயந்தானா நீங்கள் சற்று ஆராய்ந்து சொல்லுங்கள் என்கிறான்.

English Translation

Transforming his fragrant flower coiffure into matted hair, chaitging from soft silk vestured to grass-belt and bax-k-cloth, robbing his limbs of their luster by removing his jewels, my able-bodied son went into the forest where  should have gone; O Learned Seers, O Sumantra! O Vasishta! You tell me, is this proper?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top