(686)
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே
பதவுரை
| உம்பரு உலகு |
– |
மேலுலகங்களை யெல்லாம் |
| ஒரு குடை கீழ் |
– |
ஒரு கொற்றக் குடையின் நிழலிலே |
| ஆண்டு |
– |
அரசாண்டு |
| உருப்பசி தன் |
– |
ஊர்வசியினுடைய |
| அம் |
– |
அழகிய |
| பொன் கலை அல் குல் |
– |
பீதாம்பர மணிந்த அல்குலை |
| பெற்றாலும் |
– |
அடையப் பெறினும் |
| ஆதரியேன் |
– |
(அதனை) விரும்பமாட்டேன்; |
| செம் பவளம் வாயான் |
– |
சிவந்த பவழம் போன்ற வாயையுடையனான |
| எம்பெருமான் |
– |
எனது அப்பனுடைய |
| திருவேங்கடம் என்னும் பொன்மலை மேல் |
– |
திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல் |
| ஏதேனும் ஆவேன் |
– |
ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் படியாகக் கிடக்க வேணுமென்று பிரார்த்தித்தது எம்பெருமானுடைய பவளவாய் காண்பதற்காக; அப்புருஷார்த்தம் கிடையாதொழியினு மொழியும்; ஏனெனில்; திருமலையில் ஸந்நிதிக்குள் கருங்கல் படியிருப்பது திருவேங்கட முடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று மஹா ப்ரபுக்கள் வந்து அப்படியை ஸ்வர்ணகவசத்தால் ஆவரிக்கக் கூடும். அப்போது நாம் அப்பன் திருமுகமண்டல ஸேவையை இழந்தோமாவோம்; ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கல்ல என்று அறுதியிட்டார். பின்னை எந்தப் பிறவியைப் பிரார்த்திக்கலாமென்று யோசித்தார். கீழ் நிகழ்ந்த மாதிரி ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது. கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் “ எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே” என்கிறார்.
English Translation
Even if I am offered the gold-girdled hips of Urvasi and the parasoled kingship over celestials, I will not change my mind. Yet I will settle for just anything, if it be on Venkatam hills where my Lord resides.
