(681)

(681)

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து

இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்

எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்

தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

பதவுரை

கம்பம்

தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை

மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து

கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும்

நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும்

ஐசுவர்யத்தையும்
இ அரசம்

அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான்வேண்டேன்

நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான்

எமது தலைவனும்
ஈசன்

(எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலைமேல்

அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும்

புதராய் நிற்கும்படியான
எழில் வேங்கடம்

தவம்

பாக்கியத்தை
உடையேன் ஆவேன்

உடையவனாகக்கடவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- செண்பகமரமாய்ப் பிறந்தால் திருமலைக்கு வருகிற மஹாப்ரபுக்கள் யாராவது இதனை விரும்பித் தம் வீட்டிற்கொண்டு போய் நாட்டக் கருதிப் பெயர்த்துக் கொண்டு போகக்கூடும்.  அப்படி உண்டோவெனில், ” கற்பகக்காவுகருதிய காதலிக்கு இப்பொழுது ஈவனென்று இந்திரன் காவினில், நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள், உய்த்தவன் ” என்றபடி – ஸத்யபாமைப் பிராட்டியின் விருப்பத்திற்கிணங்கிய கண்ணபிரான், ஸ்வர்க்கலோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த கற்பகத்தருவை ஸத்யபாமையின மாளிகைத் திரு முற்றத்திலே கொணர்ந்து நட்டானே.  அவ்வாறு யாரேனுமொருவர் சண்பகமரத்தையும் பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையில் வாழ்ச்சி இழந்ததாமே எனக் கருதி, அங்ஙனம் மஹாப்ரபுக்களின் விருப்பத்திற்குக் காரணமாகக் கூடாததொரு தம்பகமாய் நிற்க விரும்புகிறார்  இப்பாட்டில். கம்பம் – வடசொல்;  கம்பமத யானை  (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை.  அன்றி, மதங்கொண்டதாதலால் வெளியே விட வொண்ணாதபடி கம்பத்திலேயே கட்டப்பட்டு நிற்கின்ற யானை யென்றும், அசையுமியல்பையுடைய மதயானை என்றும் பொருளாம்.

தம்பகமாய் – புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும்.  அது  பெற்று ஸ்தம்பகம் என நிற்கும்.  அவ்வடசொல் தம்பகம் என விகாரப்பட்டது.  இனி  தம்பகமாவது  இலை காய் கனி நிழல் ஒன்றுக்கு முதவாததொரு பென்பாரு முளர்.

English Translation

I do not desire to ride on the high seat of a canopied elephant, and enjoy the wealth of this kingdom. On the glorious Venkatam hill, in his temple there, I wish to stand by a pillar and do penance.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top