(655)
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே
பதவுரை
| தூராத காதல் மனம் |
– |
ஒருநாளும் த்ருப்தி பெறாத ஆசைகொண்ட மனத்தையுடையவரான |
| தொண்டர் தங்கள் குழாம் |
– |
ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே |
| குழமி |
– |
கூடி |
| திரு புகழ்கள் பலவும் பாடி |
– |
(எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் |
|
(வாயாரப்) பாடி |
||
| ஆராத மனம் களிப்போடு |
– |
(அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள |
|
ஆனந்தத்தோடே |
||
| அமுத கண் நீர் |
– |
அமுத கண்களிலுண்டான நீர்த்துளிகள் |
| மழை சோர |
– |
மழை போல் பெருகிவர |
| நினைந்து உருகி ஏந்தி |
– |
(எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) |
|
மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி, |
||
| நாளும் |
– |
எப்போதும் |
| சீர் ஆர்ந்த முழவு ஓசை |
– |
நல்ல வாத்யங்களின் கோஷமானது |
| பரவை காட்டும் |
– |
கடலோசைபோல் முழங்கப் பெற்ற |
|
திரு அரங்கத்து ஸ்ரீரங்கத்திலே அரவு அணையில் பள்ளிகொள்ளும் |
||
| போர் ஆழி |
– |
(பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாகவுடைய |
|
திருவாழியாழ்வானை யுடையவரான |
||
| அம்மானை |
– |
எம்பெருமானை |
| கண்டு |
– |
ஸேவிக்கப்பெற்று |
| துள்ளி |
– |
ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலைகால் தெரியாமல் கூத்தாடி |
| பூதலத்திலே |
|
பூமியிலே |
| புரளும் நாள் என்று கொல் |
– |
(உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “இன்கனிதனியருந்தான்” (நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது) என்றாற்போல, பகவத்குணங்களைத் தனியே அநுபவிக்கக் கூடாதாகையால், அக்குணங்களை வாய்விட்டுக் கதறினாலன்றி த்ருப்திபெற முடியாதபடி கரைபுரண்ட காதலையுடைய பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் எம்பெருமானது கீர்த்திகளை வாயாரப்பாடி அதனால் ஆநந்தக்கண்ணீர் பெருகப்பெற்று ‘நமக்குமன்றோ இவ்வநுபவம் கிடைத்தது!’ என்கிற உள்ளடங்காத பேரின்பப் பெருமையாலே “மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை” என்கிற திருவாய் மொழியிற்படி தலைகால் தெரியாமல் துள்ளிக்கூத்தாடி, இப்போது ஸிம்ஹாஸநத்திலே மார்பு நெறித்திருக்கு மிருப்புத் தவிர்ந்து ஆநந்த மிகுதியாலே நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ? என்கிறார்.
தூராதமனக்காதல் சப்தாதி விஷயங்களை எவ்வளவு அநுபவித்தாலும் எத்தனைநாள் அநுபவித்தாலும் சிறிதும் த்ருபதிடையாத இந்திரியங்களையுடையவர்களின் கோஷ்டியில் நின்றும் விலகி, எம்பெருமானை எவ்வளவு அநுபவித்தாலும் பர்யாப்தி பெறாத மெய்யடியார்கள் திரளிலே புக விரும்புகிறபடி. பரவை காட்டும் என்றது-கடலின் அலைகளின் கோஷத்துக்கு ஓய்வு இல்லாதாப்போலே கோயிலில் வாத்யங்களின் முழக்கத்துக்கு ஓய்வு இல்லாமையால் கடலை ஒத்திருக்கின்ற என்றவாறு. பரவை-கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி.
English Translation
The discus-wielding-Lord reclines in Arangam, where auspicious drums roll like the ocean every day. His bands of devotees, –their hearts filled with insatiable desire, –sing his praise in many ways, contemplate him and derive abiding satisfaction; their eyes rain tears, their hearts melt. O, when will the day be when I sing and dance and roll on the floor with them?
