(646)

(646)

பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை பாரின்மேல்

விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்

மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்

பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே

பதவுரை

பரு தாள் களிற்றுக்கு

பருத்த கால்களையுடைய கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த

க்ருபைபண்ணின
பரமன் தன்னை

திருமாலை
பாரின் மேல்

இந்நிலத்திலே
விருந்தாவனத்தே கண்டமை

ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப்பற்றி
விட்டுசித்தன் கோதை சொல்

பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப்பாசுரங்களை
மருந்து ஆம் என்று

(பிறவிநோய்க்கு) மருந்தாகக் கொண்டு
தம் மனத்தே

தங்கள் சிந்தையிலே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்

அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள்
பெரு தாள் உடைய பிரான் அடி கீழ்

பெருமை பொருந்திய திருவடிகளையுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே
என்றும்

எந்நாளும்
பிரியாது இருப்பார்

பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்

English Translation

These are words by Vishnuchitta’s daughter Goda, of seeing on Earth in Brindavana the cosmic lord who saved the elephant. Those who keep it in their hearts as remedy for life’s ills will forever be inseparable from the feet of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top