(644)
வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
பதவுரை
| வெளிய சங்கு ஒன்று உடை யானை |
– |
வெளுத்த ஸ்ரீபாஞசயமொன்றைவுடையனாய் |
| பீதகம் ஆடை உடையானை |
– |
பீதாம்பரத்தை உடையாகக்கொண்டவனாய் |
| நன்கு அளி உடைய |
– |
நன்றாகக் கருபையுடையவனாய் |
| ஆழியானை |
– |
திருவாழியாழ்வானை யுடையவனாய் |
| திருமாலை |
– |
ச்ரிய, பதியான கண்ணனை |
| களிவண்டு |
– |
(மதுபானத்தாலே) களித்துள்ளவண்டுகளானவை. |
| எங்கும் |
– |
எப்புறத்திலும் |
| கலந்தால் |
– |
பரம்பினாற்போலே |
| கமழ் ப குழல்கள் |
– |
பரிபளிக்கின்ற அழகிய திருக்குழல்களானவை |
| தடதோள்மேல் |
– |
பெரியதிருத்தோள்களின்மேலே |
| மிளிர நின்று விளையாட |
– |
(தாழ்ந்து) விளங்கநின்று விளையாட |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கடல்போலே கறுத்த திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைய விலக்ஷணமான ஸ்ரீபாஞ்சந்யத்தைகையிலேயுடையனும், பீதாம்பரதரனும், பிராட்டியோட்டைச் சேர்த்யடியாக கருணையுடையனும் திருவாழியாழ்வானை யுடையனுமான பெருமானைக கண்டதுண்டோ? மதுபானத்தாலே மதித்தவண்டுகள் பரம்பினாற்போல, பரிமளப்ரசுரமாய் அழகான திருக்குழல்களானவை திருத்தோள்களிலே நிறலைய விளையாடா நிற்க விருந்தாவத்திலே கண்டோம்.
வெளிய – வெள்ளிப் என்பதன் தொகுத்தல். இப்பாட்டுக்கு அழகிய மணவாளச்சீயர் மூலத்தின்மேல் பொருள் அரளிச்செய்யும்போது ‘வெளியசங்கொன்றுடையானை, என்றதன் பக்கத்திலே ஆழியானை என்பதைக்கொண்டு சேர்த்து “***“ (பாடக்ரமாத் அர்த்தக்ரமோ பலீயாந்) என்கிற ந்யாயத்தாலே “வெளிசங்கொன்றுடையானை ஆழியானை” என்று அந்வயித்துப் பொருள் கொள்ளுதல் நான்று என்றருளிச்செய்து, மேலே வியாக்கியானம் ஸேவிக்குமிடத்து.
“ஆழியானை – ஸ்ரீபாச ஜந்யத்தோடே சொல்லில் கண்ணெச்சிலாமென்று பிரித்து அநுபவிக்கிறாள்“ என்ற ஸ்ரீஸூக்தியைத்திருச்செவிசாத்தி. “ஐயோ! இந்த ஸ்வாரஸ்யத்தை அறியப்பெற்றிலேனே!இப்படி அர்த்தமருளிச்செய்ய ஆர்க்குத் தெரியும் என்று நெடும்போது கண்ணுங் கண்ணீருமாயிருந்தருளினார்.
எம்பெருமானுடைய திருக்குழல்கள் “மைவண்ணநறுங்கிகுஞ்சி குழல் பின்தாழ” என்றபடி தோள்களில் அலையாநிற்பதைக் களிவண்டுகள் பரம்பினதாக உத்ப்ரேக்ஷிக்கிறபடி. “செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல் திருமேனியாகையாலே வண்டுகள் மொய்க்குமிறே.
English Translation
“The Lord has a white conch, beautiful discus, and yellow robes. Did you see this Tirumal, Lord of immense compassion?” “With tresses on shoulders hovering like bees over his lotus-face, we saw him in Brindavana”.
