(643)
பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
பதவுரை
| பொருத்தம் உடைய நம்பியை |
– |
பொருத்தமுடைய ஸ்வாமியாய் |
| புறம்போல் உள்ளும் கரியானை |
– |
உடம்புபோலே உள்ளமும் கறுத்திராநின்றவனாய் |
| கருத்தை பிழைத்து நின்ற |
– |
நான் எண்ணும் எண்ணத்தைத்தப்பி நிற்பவனாய் |
| அக் கரு மா முகிலே |
– |
கறுத்துப் பெருத்தமுகில் போன்றவனான அக் கண்ணபிரானை கண்டீரே? |
| அருத்தி |
– |
விரும்பப்பெறுகின்ற |
| தாரா கணங்களால் |
– |
நக்ஷத்ர ஸமூஹங்களாலே |
| ஆர பெருகு |
– |
மிகவும் நிறைந்திருந்துள்ள |
| வானம் போல் |
– |
ஆகாசம்போல் |
| விருத்தம்பெரிது ஆய் |
– |
பெருங்கூட்டமாய் |
| வருவானை |
– |
எழுந்தருளாநின்ற அப்பெருமானை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் பொருத்தமிலியைக் கண்டீரே என்றுவைத்து இப்பாட்டில் “பொருத்தமுடைய நம்பியை“ என்றது ஏன்? என்னில், பத்துடையடியவர்க்கு எளியவனான பெருமானையோ நாம் பொருத்தமிலி என்பது, அப்படிச் சொல்வது தகுதியல்ல. அவன பொருத்தமுடையவனேயாவன் என்று திருவுள்ளம்பற்றிச் சொல்லுகிறாள். என்பர் சிலர். அங்ஙன்ன்றியே “இந்தப்பிள்ளை பரமஸாது“ என்றால்அஃது எதிர்மறை இலக்கணையாய் துஷ்டன் என்று காட்டுமாபோலே இங்கும் பொருத்தமுடைய நம்பியென்றது பொருத்தமில்லாமையே சொல்லிற்றாகக் கொள்க இதுவே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம்பற்றின கருத்தாம். பொருத்தமிலியென்பது நாட்டில் பொருந்தாரளவில் நிற்கு மன்றன்றோ“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி -பொருத்தமில்லாதவர்கள் உலகிலும் பலபேருண்டு, அவர்களைப் பொருத்தமிலிகள் என்று சொல்லுகிறாப்போலவே எம்பெருமானையும் பொருத்தமிலி என்று சொல்லிவிட்டால் நாட்டாருடைய பொருத்தமின்மைக்கும் எம்பெருமானுடைய பொருத்தமின்மைக்கும் வாசி ஏற்படாமல் போகுமென்று அதற்காக விலக்ஷணப்ரக்ரியையிலே சொல்லுகிறபடி. அதாவது விபரீதலக்ஷணை.
புறம் போலுள்ளும் கரியான் – திருமேனி கறுத்திருந்தாலும் திருவுள்ளம் சுத்தமாயிருக்கலாமே, அதுவும் அசுத்தமாகவேயிருக்கிற தென்று நர்மோக்தி அதவா – இதுவும் விபரீதலக்ஷணை, உள்ளும் புறமும் ஒத்திருப்பவன், மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத்துராத்மநாம் என்கிற கோடியில் சேர்ந்தவனல்லன், “மநஸ்யேகம் வசஸ்யேகம் சர்மண்யேகம் மஹாத்மநாம்“ என்கிற கோடியிலு சேர்ந்தவன் என்று மேலெழ் சொல்லுகிறபடியாய், விபரீதலக்ஷணையால், உள்ளேயொன்றும் வெளியே ஒன்றுமாயிருப்பவனென்று காட்டுகிறது.
கருத்தைப் பிழைத்து நின்ற – ஸம்ஸ்லேஷித்திருக்குங் காலத்திலே “மாதே! உன்னை நான் விட்டுப்பிரியென், பிரிந்தால்தரியேன்“ என்று அவன் சொல்ல அதைமெய்தானென்று நம்பியிருக்கிற நம்பிக்கையைப் போக்கடித்தவன் என்றவாறு. இப்படிச் சொல்லுகிறவன் ஒருகாலும் நம்மைவிட்டுப் பிரியமாட்டான் என்று கொண்ட கருத்தைத் தப்பி, பிரிந்திருப்பவனென்றபடி.
(அருந்த்தித்தாராகணங்களால் இத்யாதி) அருத்தி என்று விருப்பத்திற்கும் விருபபப்படும் பொருளுக்கும் பெயர். ரமணீயங்களான தாராகணங்களால் என்றப்படி. இங்ஙனே தமிழர்கள் நிர்வஹிக்கும்படி. பூருவர்களின் வியாக்கியானரீதியோவென்னில், “***“ என்னும் வடசொல் அருத்தியெனத்திரிந்து, ப்ராத்திக்கப்படுகின்ற“ என்று பொரு பெற்றுக்கிடக்கிறதாய், சேதநர் பிரயோஜநார்த்தமாக நவக்ரஹங்களையும் உபாஸனை பண்ணுகையாலே அதைப்பற்றி அருத்தி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதாக.
விருத்தம் – “***“ (ப்ருந்தம்) என்னும் வடசொல் விருத்தமெனத்திரிந்து கிடக்கிறது.
English Translation
“Through and through dark inside and out like a cloud, did you see the Lord whom the mind cannot grasp?” “Like a myriad beautiful stars cluttering the dark wide sky, we saw him with his team coming in Brindavana”.
