(642)
தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே
பதவுரை
| தருமம் அறியா |
– |
இரக்கமென்பது அறியாதவனாய் |
| குறும்பனை |
– |
குறும்புகளையே செய்யுமவனாய் |
| தன் கை சார்ங்கம் அதுவே போல் |
– |
தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப்போன்ற |
| புருவவட்டம் |
– |
திருப்புருவ வட்டங்களாலே |
| அழகிய |
– |
அழகுபெற்றவனாய் |
| பொருத்தம் இலியை |
– |
(அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்திவாழப்பெறாதவனாய் பெருமானை |
| உருது கரிது ஆய் |
– |
திருமேனியில் கருமைபெற்றும் |
| முகம் செய்து ஆய் |
– |
திருமுகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே |
| உதயம் பருப்பதத்தின் மேல்விரியும் கதிர் போல்வானை |
– |
உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை (விருந்தாவனத்தே கண்டோமே) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தயையென்கிற தர்மத்தை ஈஷத்தும் அறியாதவனாய், குறும்பு செய்வதையே தொழிலாகக்கொண்டவனாய், தன்கையிலுள்ள சார்ங்க வில்போன்று வட்டமாய் அழகியதான திருப்புருவங்களை யுடையவனாய், உதந்தாரோடே பொருந்திவாழப் பெறாதவனான பெருமானைக கண்டதுண்டோ? உண்டு, கண்டாருடைய கண்களெல்லாம் குளிரும்படி இருண்டவ்வையுடையனாய், செந்தாமரைபோற் சிவநத திருமுகமண்டலத்தை யுடையவனாய், உதய பர்வதத்தின்மேலே ஆதித்யன் உதிக்கும்போதுள்ள ப்ரபாவிசேஷத்தையுடையனான கண்ணபிரானை விருந்தாவனத்திலே கண்டோம்.
?????? (தர்மம்) என்றும் வடசொல் தரும்மெனத் திரிந்தது. “ஆந்ரு சம்ஸ்யம் பரோ தரம்“ என்று பிறர் பக்கல் இரக்கமே பரம தர்மமாகச் சொல்லுகையாலே அப்படிப்பட்ட இரக்கமில்லாதவனென்று ஊடல் தலையெடுத்துச் சொல்லுகிறபடி.
??????? (தன்கைச் சார்ங்கமித்யாதி) கண்ணபிரானுடைய திருப்புருவங்களுக்கு வேறொன்றும் ஒப்பாகமாட்டாது, அவன் கையிலே வில்லைப்பார்த்தால் “முகத்திலிருக்க வேண்டியது கையிலிருக்கிறதே! இஃது என்ன? என்று வியக்கும்படி யாகவும், முகத்திலே புருவத்தைக் கண்டால் “கையிலேயன்றோ வில் இருக்க வேண்டுவது, இஃதென்ன முசத்திலிருக்கிறதே! முகத்திலேயும்வில் இருக்கக் கடவதோ? என்று வியக்கும்படியாகவும் இருக்குமாம். இத்தால் – சாரங்கத்துக்கும் புருவத்துக்கும் தார்ரூப்யமல்ல, தாதாத்யம் என்று சொன்னபடி வேறொன்று ஒப்பில்லாதிருக்கும் உறைப்பைத் தெரிவித்தபடி. வட்டம் (வருத்கம்) என்ற வடசொல் விகாரம்.
(பொருத்தமிலியை) “இவ்வழகுண்டானால் பிரயோஜனம் ஏன்? உகந்தார் பக்கல் ரஸந்தொங்கிலும் தொங்கான்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யத்தையை அநுபவிக்க.
(உருவு கரிதாய் இத்யாதி) திருவுருவம் உதய பர்வதமாகவும், முகம் ஸூர்யமண்டலமாகவும் ரூபிக்கப்பட்டது. பர்வதமென்னும் வடசொல் பருப்பதமென்று கிடக்கிறது. “பருப்பதத்துக் கயல் பொறித்த“ என்றாரிறே பெரியாழ்வாரும்.
English Translation
“The unruly rogue has curved eyebrows, like the Sarnga bow he wields. Did you see the Lord of inconsistencies?” “His body dark, his face red, he looked like the rising Sun over the Eastern mount. We saw him then in Brindavana”.
