(641)
மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
பதவுரை
| மாதவன் |
– |
ச்ரியபதியாய் |
| என் மணியினை |
– |
எனக்கு நீலரத்னம்போலே பரமபோக்யனாய் |
| வலையில் பிழைத்த பன்றிபோல் |
– |
வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றிபோலே (செருக்குற்று) |
| ஏதும் ஒன்றும் |
– |
(தன்பக்கலுள்ள) யாதொன்றையும் |
| கொள தாரா |
– |
பிறர்கொள்ளும்படிதாரார் தவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான) ஈசன் தன்னை கண்டீரே? |
| பீதகம் ஆடை |
– |
திருப்பதாம்பரமாகிற |
| உடை |
– |
திருப்பரிவட்டமானது |
| தாழ |
– |
தொங்கத் தொங்க விளங்க |
| பெரு கார் மேகம் கன்று போல் வீதி ஆரவருவானை |
– |
பெருத்துக்கறுத்துதொரு மேகக்குட்டிபோலே |
| வீதி ஆர வருவானை |
– |
திருவீதி நிறைய எழுந்தருளும் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்) |
|
– |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமகள் கொழுநனாய், எனக்கு நீலமணிபோலே அனுபாவ்யனாய், வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றிபோல் செருக்கி ஒருவர் கைக்கும் பிடிகொடாதவனான பெருமானைக் கண்டதுண்டோ? உண்டு, திருவரையில் பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்துகொண்டு காளமேகக்குட்டியிபோல் திருவீதி நிறைய எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம்.
“மாதவனென் மணியினை” என்று ப்ரதீகமெடுத்து -“தன்னுடைய ரஸிசுத்வம் எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யனாயிருக்கிறவனை” என்று தாத்பர்ய மருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளையின் திருவுள்ளத்தின் ஆழத்தை என் சொல்வோம்!. “சுவையன் திருவின்மணாளன்“ என்ற திருவாய்மொழியை அடியொற்றி மாதவனென்பதற்கு ரஸிகனென்றே பொருள்கொண்டார், ஒரு சிறந்த மணியானது பெருவிலையுடைத்தாயிருப்பினும் துணியின் தலைப்பில் முடிந்தாளலாம்படி கைச்சரக்காயிருக்குமென்பது திருவுற்றம்பற்றி என்மணியினை என்பதற்கு “எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யன்“ எனப்பொருள் கொண்டார். இனி ஸமபிவ்யாஹார ஸித்தமான தாத்பர்ய விசேஷத்தைப் பரமபோய்கமாக அருளிச்செய்தார்.
வலையிலன் – ஐந்தாம் வேற்றுமை. என்றைக்கும் வலையில் அகப்படாத தொன்றை வருந்தி வலைப்படுத்தலாம். வலைப்பட்டிருந்து தப்பினதை வருந்தியும் வலைப்படுத்தமுடியாது, அப்படித் தப்பின பின்பு அதற்குள்ள செருக்கும் வாசாமாகோசரமாயிருக்கும். அப்படிப்பட்ட செருக்கு கண்ணபிரானுக்குள்ள தென்பதைக் காட்டுதற்பொருட்டு “வலையிற் பிழைத்த பன்றிபோல்“ எனப்பட்டதென்க ஏதும் ஒன்றும் – அணுமாத்திரமும், கௌ -பிறர் கொள்ளும்படி தாரா – தன்னிடத்திலிருந்து கொடாத -செருக்கு மிக மிக துர்லபத்வம் (கைக்கு எட்டாமை) மிகுகின்றதென்றபடி. கொள்ள என்பது கொள என்று தொக்கிக் கிடக்கிறது.
வீதியார வருவானை – மேகமானது ஆகாசப் பரப்படங்கலும் தனக்கு இடமாக்கிக்கொண்டு வருமாபோலே கண்ணபிரான் வீதிப்பரப்பையெல்லாம் தனக்கு இடமாக்கிக்கொண் எழுந்தருள்வனென்க.
“பஸ்சாத் கவாம் கோபஸுதை பரீதோ வேணுஸ்வாநாந்ந்தித விச்வ சேதா, ஸம்பூர்ய வீதீம் ஸவிலாஸமாயந் கோபலபால குலதைவதம் ந“ என்று ப்ரதிவாதி பயங்கரம் அண்ணரப்பா அருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
English Translation
“Utterly invincible as a boar-escaped-from-the-dragnet, did you see my black-gem Lord Madavan?” “Like temple’s stud-bull-calf taken around the precincts, his yellow robes all hanging, we saw him in Brindavana”.
