(571)

(571)

உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை

இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்

மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு

முண்கின்றாய் பாஞ்சசன் னியமே

பதவுரை

பாஞ்சசன்னியமே!

சங்கே!
ஒரு கடலில்

ஒரேகடலில்
உன்னோடு உடனே

உன்னோடு கூடவே
வாழ்வாரை

வாழப்பிறந்தவர்களான மற்றும்பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்

ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண்,

(நீ ஒருவன் மாத்திரம்)

மன் ஆகி நின்ற

ஸர்வஸ்வாமியாயிராநின்ற
மதுசூரன்

கண்ணபிரானுடைய
வாய் அமுதம்

திருவாயினமுதத்தை
பல் நாளும்

பலகாலமாக
உண்கின்றாய்

பருகாநின்றாய்.

(ஆகையால் நீயே பாக்யசாலி)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஓ பாஞ்சசன்னியமே! நீ பிறந்தவிடத்தில் உன்னைப்போலப் பிறந்தவர்கள் எத்தனையோபேர்கள் இருக்கிறார்களன்றே, அவர்களை யாராவது நெஞ்சிலும் நினைப்பாருண்டா? அவர்களுடைய ஸ்வரூபம் இப்படிப்பட்டது, ஸ்வபாவம் இப்படிப்பட்டதென்று யாராவது அறிய விரும்பினாருண்டா? இல்லை, அப்படியிருக்க, உனக்கொருத்தனுக்கு மாத்திரம் வந்த வாழ்ச்சி என்னே!, கண்ணபிரானுடைய திருவாயிலமுதத்தை அல்லும் பகலும் அருந்துகின்றாயே! உன்னுடைய பாக்கியமே பாக்கியம் என்று கொண்டாடுகின்றாள்.

இன்னார் இனையார் – இன்ன உருவத்தை யுடையவர்கள், இன்ன இயற்கையையுடையவர்கள். “இன்னாரினியாரென்று“ என்ற பாடமும் ஒருவாறு என்று பொருளாய், உன்னோடுடனே ஒருகடலில் வாழ்வாருடை நன்மைதீமைகளைப்பற்றிச் சிந்திப்பாராருமில்லை என்று கருத்தாகலாம்.

பாஞ்சசன்னியமே! – நான் பெரியாழ்வார்பாடே வளர்ந்தும் பயனற்றிராநின்றேன், நீ பஞ்சஜநாஸுரன்பாடே வளர்ந்தும் ஒப்பற்ற பயன்பெற்றிராநின்றாய், பிறப்பிலும் வளர்பிலும் என்ன இருக்கிறது? அத்ருஷ்டம் செவ்வனேயிருத்தல் வேண்டும், அஃது உனக்கு நன்கு அமைந்ததுகாண் – என்கிறாள் போலும்.

English Translation

Others who grew up with you in the ocean have remained unheard and unsung. But you, — O Great Conch! — have the privilege of delecting of Madhusudana’s lips.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top