(566)
ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே
பதவுரை
| வேயர் புகழ் |
– |
வேயர் குலத்தவரால் புகழப்பட்டவராய் |
| வில்லிபுத்தூர் கோன் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான) |
| கோதை |
– |
ஆண்டாள் |
| தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை |
– |
தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப்பட்டதாகக் கனாக்கண்டபடியைக் குறித்து |
| சொல் |
– |
அருளிச்செய்த |
| தூய |
– |
பரிசுத்தமான |
| தமிழ் மாலை ஈர் ஐந்தும் |
– |
தமிழ்ந்தொடையான இப்பத்துப்பாட்டுக்களையும் |
| வல்லவர் |
– |
ஓதவல்லவர்கள் |
| வாயும் |
– |
நற்குணகளமைந்த |
| நல்ல மக்களை பெற்று |
– |
விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று |
| மகிழ்வர் |
– |
ஆநந்திக்கப் பெறுவர்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆயர்புத்திரனாகிய கண்ணபிரானுக்கு வாழ்க்கைப்பட்டதாக ஆண்டாள் கனாக்கண்டபடியை வெளியிட்ட இத்திருமொழியை ஓதவல்லவர்கள் பகவத்விஷயத்திலே ப்ராவண்யமுடைய விலக்ஷணபுதுதிரர்களைப் பெற்றுப் பரமானந்தமடைவர்களென்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டினபடி.
தமிழ்மாலைக்குத் தூய்மையாவது – அநுபவத்தின் பரீவாஹரூபமாகப் புறப்பட்டதாயிருக்கை. கவநசாதுரியத்தைக் காட்டுவதற்கென்றே கவிபண்ணு வாரைப்போலன்றே ஆண்டாள்.
வாயும் நன்மக்களை – “மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே“ என்றார் பெரியாழ்வாரும்.
இக்காலத்தில் கல்யாணம் நடக்குமிடத்து, பச்சைக்கல்யாண தினத்தினன்று அத்யாபகர்கள் இத்திருமொழியை ஓதிச் சீர்பாடல் பாடும்போது, “சீர்பாடி களிமண்பாடப்போமே“ என்று நீட்டுவதைப் பெரும்பாலும் அனைவரும் கேட்டிருப்பார்கள். அந்தவாக்கியத்தின் உண்மையான ஆநுபூர்வி எப்பட்டதென்று பலர் விமர்சிப்பர்கள், “தளிர்பண்படுப்போமே“ என்றிருக்கவேணுமென்று சிலர் திருத்துவர், “தளுவம் பிடிப்போமே“ என்றிருக்கவேணுமென்று சிலர் திருத்துவர்கள்; (ஒவ்வொரு சீர்பாடலுக்கும் அத்யாபகர்கள் தளுவம்பிடித்துத் தாம்பூலம் பெறுதுல் சிலவூர்களில் வழக்கமாம்.) “சீர்பாடிக் களிமின் களிப்போமே“ என்பதுதான் உண்மையான வாக்கியமென்று அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்யக் கேட்ழருக்கை. சீர்பாடல்பாடி நீங்கள் சந்தோஷியுங்கள், நாங்களும் சநதோஷிக்கிறோம் என்றபடி. இந்த வாக்கியத்தை இசையிலே நீட்டி சொல்லும்போது “களிமின்காளிப்போமே“ என்று சொல்லிக்கொண்டுவந்தார்கள் முன்னோர்; நாளடைவில் ‘களிமண்பா‘ வாகவும் ‘டப்போமே‘ யாகவும் விகாரத்தைப் பெற்றொழிந்தது.
English Translation
This decad of pure Tamil verses by famous Villiputtur-king’s daughter Goda, describes her dream of marrying the cowherd-Lord. Those who sing it will be blest with good progeny.
