(565)
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
பதவுரை
| குங்குமம் |
– |
குங்குமக்குழம்பை |
| அப்பி |
– |
உடம்பெல்லாம்பூசி |
| குளிர்சாந்தம் |
– |
குளிர்ந்தசந்தனத்தை |
| மட்டித்து |
– |
கனக்கத்தடவி |
| ஆனைமேல் |
– |
மத்தகஜத்தின்மேலே |
| அவனோடும் உடன் சென்று |
– |
அக்கண்ணபிரானோடு கூடியிருந்து |
| மங்கலம் வீதி |
– |
(விவாஹநிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே |
| வலம் செய்து |
– |
ஊர்வலம் வந்து |
| மணம் நீர் |
– |
வஸந்த ஜலத்தினால் |
| மஞ்சனம் ஆட்ட |
– |
(எங்க ளிருவரையும்) திருமஞசனம் பண்ணுவதாக |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரானும் தானுமாக அக்நிஸமீபத்திலே சிலநாழிகை இருக்கநேர்ந்தமையால் அப்போதுண்டான வெப்பம் பொறுக்கமுடியாததாக, அதற்குப் பரிஹாரமாகக் குளிர்ந்த குங்குமக்குழம்பையும் ந்தனச்சேற்றையும் திருமேனியெங்கும் அப்பி இந்தத் திருவீதிவலம்வந்து, பிறகு வஸந்தஜலத்திலே மஞ்சனமாட்டப் பெற்றதாகக் கனாக்கண்டேனென்கிறாள். பச்சைக் கல்யாணத்தன்றிரவு நடைபெறும் வஸந்தஸ்நாநம் இப்பாட்டிற் கூறப்பட்டதென்க.
English Translation
I had a dream O sister! They smeared me with red powder and sandal paste, and took us around the town on an elephant, then bathed us both with scented water.
