(564)
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
பதவுரை
| வரி சிலை வான் முகம் |
– |
அழகிய வில்போன்ற புருவத்தையும் ஒளிபொருந்திய முகத்தையுடையவர்களான |
| என் ஐமார் தாம் |
– |
எனது தமையன்மார்கள் |
| வந்திட்டு |
– |
வந்து |
| எரிமுகம் பாரித்து |
– |
அக்னியை நன்றாக ஜ்வலிக்கச்செய்து |
| முன்னே என்னை நிறுத்தி |
– |
அந்த அக்னியின்முன்னே என்னை நிறுத்தி |
| அரி முகன் |
– |
(ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹமுகத்தையுடைனாய் அவதரித்த |
| அச்சுதன் |
– |
கண்ணபிரானுடைய |
| கை மேல் |
– |
திருக்கையின்மேல் |
| என் கை வைத்து |
– |
என்னுடைய கையை வைத்து |
| பொரி |
– |
பொரிகளை |
| முகந்து அட்ட |
– |
அள்ளிப்பரிமாற |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அம்மிமிதித்தபிறகு ‘லாஜஹோமம்‘ செய்வது முறைமை, அதாவது பொரியையிட்டு ஆஹுதிசெய்தல், அது நடந்தபடியைச் சொல்லுகிறாள் இப்பாட்டில். ப்ரயோகசந்த்ரிகை என்னும் க்ரந்த்ததில் விவாஹப்ரகரணத்தில் லாஜஹோமமுறைவரையுமிடத்து “***“ (பத்ந்யாஸ்ஸோ தர்யோ லாஜாநாவபதீத்யேகே) அதாவது – மணவாட்டியின் கூடப்பிறந்தவன் பொரிகளை எடுத்திடுவதாகச் சிலர் கொள்கை என்று சொல்லப்பட்டிருந்த்தலாலும் அநுஷ்டானமும் அப்படியேயிருப்பதாலும் “என்னைமார்தாம்வந்திட்டுப் பொரி முகந்தட்ட“ என்கிறாள். என்னைமார் – என் ஐமார்- தமையன்மார், இப்பகம் திருவாய்மொழியிலும் (ஆறாம்பத்தில் இரண்டாந்திருவாய்மொழியில் ஏழாம் பாட்டில்) பிரயோகப்பட்டுள்ளமை காண்க. “என்னைமார் தன்மபாவமென்னார் ஒருநான்று தடிபிணக்கே“
சிலைபோன்ற புருவமென்னவேண்டுமிடத்துச் சிலை என்றது – முற்றுவமை. “தாவி வையங்கொண்ட தடந்தாமரைகட்கே“ என்றதுபோல, “கஞ்சை காய்ந்த கருவல்லி“ என்று மேலும் வரும். ப்ராதாக்களுடைய முகத்தை வர்ணிப்பதற்குக் கருத்துத் தோன்றப் பெரியவாச்சன்பிள்ளை வியாக்கியானிக்கிறார் – “என்னுடைய ப்ராதாக்களானவர்களே இதுக்கெல்லாம் அபிமாநிகள் என்னுமிடம் தங்கள்முகத்திலொளியிலே காணும்படியாக வந்து அந்நிமுகத்தைப் பாரித்து, நான் வ்ரீளையாலே இறாய்க்க என்னையெடுத்து முன்னேநிறுத்தி.“
மைத்துனமைமுறையுடையார் கல்யாணப்பிள்ளையை இளிம்புபடுத்திச் சிரிக்கவேணுமென்று சில சேஷ்டைகள் செய்வது வழக்கம். அப்படியே கண்ணபிரான் விஷயத்தில் சிலர் செய்யப்பார்த்தபோது அவற்றை அவன்லக்ஷியஞ செய்யாமல் அவற்றுக்கு ஏமாந்துபோகாமல் பெருமிடுக்கனாகவேயிருந்தபடியைக் காட்டும்மாம் அரிமுகன் என்ற அடைமொழி.
முகந்து அட்டுதல் – எடுத்துப்ரக்ஷேபித்தல்.
English Translation
I had a dream O sister! Bright-faced brothers with bow-like eyebrows stood me before the kindled fire. They placed my hands over the lion-like Achyuta’s, then heaped puffed-rice for feeding the fire.
