(563)

(563)

இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்

நம்மையு டையவன் நாராய ணன்நம்பி

செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி

அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்

பதவுரை

இம்மைக்கு

இப்பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்

மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான்

சரண்யனாயிருப்பவனாய்
நம்மை உடையவன்

நமக்குசேஷியாய்
நம்பி

ஸகல கல்யாணகுண பரிபூர்ணனாய்
நாராயணன்

நாராயணனான கண்ணபிரான்
செம்மை உடைய திரு கையால்

செவ்விய (தனது) திருக்கையினால்
தாள் பற்றி

(எனது) காலைப்பிடித்து
அம்மி மிதிக்க

அம்மியின்மேல் எடுத்து வைக்க

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “உன்றன்னோடுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்“ என்றபடி காலத்தவமுள்ளதனையும் நம்முடைய பணிவிடைகளை ஏற்றுக்கொண்டு நம்மை நோக்குமவனான கண்ணபிரான் தனது செந்தாமரை மலர்போன்ற திருக்கையாலே என்காலைப்பிடித்து அம்மிமிதிப்பிக்கக் கனாக்கண்டேனென்கிறாள். இது அச்மாரோஹணம் எனப்படும். மணவாளப்பிள்ளை மணவாட்டியின் காலைப்பிடித்துக்கொண்டு போய் அம்மியை மிதிக்கச்செய்வது முறைமையோ?பெண் பிள்ளையின் காலை ஆண்பிள்ளை வந்து பிடிப்பது பொருந்துமோ? இது யாஸ்த்ர மதியாதைக்குச் சேருமா? அப்படி ப்ரமாணந்தானுண்டோ வென்று பல போக்கு இதிலே விசிகித்ஸைபிறக்கும், திருக்கையால் தாள்பற்றுகையென்பது அயாஸ்த்ரீயமான காரியமென்று சிலர் க்ரந்தமும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள், பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானவைகரியின் ஸ்வாரஸ்யத்தை ஆராயப்பெற்றிலர் போலும், வியாக்கியமான ஸ்ரீஸூக்தி வருமாறு “(செம்மை யுடையதிருக்கையால் தாள்பற்றி) பிள்ளையுறவு முறையார் வேண்டா வென்பர்கள், பெண்பிள்ளையுறவு முறையார் வேணுமென்னாநிற்பர்கள், இப்படி இரண்டுதலையிலுள்ளாரும் சார்த்தை சொல்லாநிற்கச் செய்தே கானேவந்து காலைப்பிடிக்கக் கணிசியாநிற்குமாய்த்து அதாவது ஆச்ரிதர்கால் பிடிக்கவென்றால் இறாயாத கையாய்த்து உபதேஸிகாலத்திற் போலன்றிறே பரிமாற்றத்திலிருப்பது, உபதேசிப்பது அவன்காலைப் பிடிக்கக்கடவதாக, பரிமாற்றத்திலிருப்பது, அவன்றான் கால் பிடிக்கும்படியாக வாய்த்திருப்பது . . . (தோழீ! நான்) … அவன்ஸவபாவம் நீ சொல்லக் கேட்டபடியே அநுபவிக்கப்பெற்றேன்.

English Translation

I had a dream O sister! Our Lord and master Narayana with lotus hands,–our sole refuge in this and seven lives to come, –lifted my foot and stood me on the grindstone.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top