(562)

(562)

வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்

பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

பதவுரை

வாய் நல்லார்

நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி

சிறந்த வேதவாக்கியங்களை உச்சரிக்க,
மந்திரத்தால்

(அந்தந்தக்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக்கொண்டு
பாசு இலை நாணல் படுத்து

பசுமைதங்கிய இலைகளையுடைத்தான நாணற்புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து

ஸமித்துக்களை இட்டு,
காய்சினம்மாகளிறு அன்னான்

மிக்க சினத்தையுடைய மத்தகஜம் போற்செருக்கனான கண்ணபிரான்
என் கை பற்றி

என்கையைப்பிடித்துக்கொண்டு
தீ வலம் செய்ய

அக்நியைச் சுற்றிவா

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வாயில் நல்வேதமோதும் வேதியர்கள் கர்மகாண்டங்களைச் சொல்லுகையன்றிக்கே பரப்ஹ்மஸ்வரூபபரங்களான புருஷ்ஸூக்தம் உபநிஷத்து முதலான வேதங்களை ஓத, அதிகம்பீரநடையையுடையனான கண்ணபிரான் மைந்தரகமாக அக்நிகாரியங்களை நடத்தி, என்கையைப்பிடிடத்துக்கொண்டு ஹோமாக்நியை ப்ரத க்ஷிணமாக்ச் சுற்றிவரக் கனாக்கண்டேனென்கிறாள்.

முதலடியில், ஓதிஎன்றது எச்சத்திரிபு, ஓத என்றபடி வாய்நல்லார்நல்ல மறையோத, காய்சினமாகளிறன்னான் மந்திரத்தால் பாசிலைநாணற்படுத்துப் பரிதிவைத்து, என்கைபற்றித் தீவலஞ்செய்யக் கணாக்கண்டேன்.

வேதராசியில் தேவதாந்தரப்ரசம்ஸாபரங்களான பாகங்களும் உள்ளமையால் “நஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேதமந்த்ரோப்யவைஷ்ணவ“ என்றபடி அவற்றை உபேக்ஷித்து வைஷ்ணவங்களான வேதபாகங்களை ஓதினார்களென்கைக்காக “நல்ல மறையோதி“ என்னப்பட்டது. “***“ என்ற வடசொல் மந்திரமெனத் திரிந்தது. பரிதி – வடசொல், நாணற்படுத்துவதும் பரிதிவைப்பதும் அக்நிகாரியங்கள். ஆண்டாளைக் கைப்பிழக்கப் பெற்றமையாலுண்டான செருக்குக்குக் காய்சினமாகளிற்றின் செருக்கு ஒக்கும். என்கைபற்றித் தீவலஞ்செய்ய – திருமங்கலியதாரணத்திற்குப்பிறகு தீவலஞ்செய்தல் முறைமையென்ப. தம்பதிகள் தங்களுடைய அன்பை அக்நிஸாக்ஷிகமாக்குகிறபடி. இந்தத் தீவலஞ்செய்தல் ஸப்தபதீ எனவும்படும்.

English Translation

I had a dream O sister! Learned priests recited from the Vedas and laid the faggots on the Darbha grass with Mantras. Like an angry elephant-bull, he led me around the fire-altar.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top