(561)

(561)

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

பதவுரை

மத்தளம் கொட்ட

–

மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கள் நின்று ஊத

–

ரேகைகளையுட்டைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூரன்

–

மைத்துனமைமுறையையுடையனாய் பூர்ணனான கண்ணபிரான்
முத்து உடைதாமம் நிரைதாழ்ந்த பந்தல் கிழ் வந்து

–

முத்துக்களையுடைய மாலைத்திரள்கள் தொங்கவிடப்பெற்று பந்தலின்கீழேவந்து
என்னை கைத்தலம் பற்ற

–

என்னைப் பாணிக்ரஹணம் செய்தருள

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மருதங்கம் முதலிய பலவகைவாத்தியங்கள் அடிக்கவும் சங்குகளூதவும் இப்படிமங்களவாத்யகோஷம் முழங்காநிற்க, கண்ணபிரான் முத்துப்பந்தலின்கீழே எழுந்தருளிப் பரணிக்ரஹணம் பண்ணியருளக் கனாக்கண்டேனென்கிறாள்.

“நின்றூத“ என்றவிடத்து நின்று என்றது வார்த்தைப்பாடு. தைதுனன் – அத்தைமைந்தன். மாமன் மகளை மணக்கும்முறையைபற்றி நப்பின்னைப் பிராட்டிக்குக் கண்ணபிரான் தைதுன்னாதலால் ஆண்டாளும் அந்தஸம்பந்தத்தை ஆசைப்பட்டு “மைத்துனன் நம்பி“ என்கிறாளென்ப மதுசூதன் – மது என்ற அசுரனைக் கொன்றவன், விரோதிநிரஸநத்தில் வல்லவன் என்றபடி. இங்கே வயாக்யாநஸ்ரீஸூக்தி – (மதுசூதன்) மற்றுமு மைத்துனமைமுறையுண்டென்று ஆரேனும் வந்து கைப்பிடிக்கப்பார்க்கில் அவர்களையழியச்செய்து தானே ஸ்வீகரிக்கவல்லவனாய்த்து, தன்னுடைமையைப் பிறர் ‘என்னது‘ என்னும்போது அவர்களையழியச்செய்து கைக்கொள்ளவல்லனாய்த்து.

English Translation

I had a dream O sister! Drums beat and conches blew under a canopy of pearls on strings. Our Lord and cousin Madhusudana held my hand in his.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top