(559)

(559)

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி

பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை

காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

பதவுரை

பாப்பனர் சிட்டாகள் பல்லார்

சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை

நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம்

தீர்த்தங்களை
கொணர்ந்து

கொண்டுவந்து
நனி நல்கி

நன்றாகத்தெளிந்து
எடுத்து ஏத்தி

உச்சஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம்பண்ணி
பூபுனை கண்ணி புனிதனோடு

(பலவகைப்) புஷ்பங்கள் புனைந்தமாலையையுடையவனாய்ப் பரமபாவநனான கண்ணா பிரானோடு
என்றன்னை

என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட

கங்கணங்கட்ட

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சக்ரவர்த்தித் திருமகனாருடைய திருவபிஷேக மஹோத்ஸவத்திற்காக ஸ்ரீவாநரவீரர்கள் நாலுஸமுத்ரத்திலுமுள்ள தீர்த்தங்களையுங்கொணர்ந்தாப்போல என்னுடைய கல்யாணமஹோத்ஸவத்திற்காக வைதிகஸார்வபௌமர்களான பல அந்தணர்கள் நாற்றிசைகளினின்றும் நாநாவகைப் புண்யதீர்த்தங்களைக் கொண்டு வந்து, ஆயுஸ்ஸு முதலான நன்மைகளெல்லாமுண்டாவதற்காக அந்தத் தீர்த்தங்களாலே தம்பதிகளாகிய எங்களைப் பலகாலும் ப்ரோக்ஷித்து, “***“ (ஆயுரரசாஸ்தே, ஸுப்ரஜாஸ்த்வமாசாஸ்தே) இத்யாதி வேதவாக்கியங்களை உச்சைஸ்ஸ்வரமாக எடுத்து ஓதி ஆஸீர்வாதங்கள் பண்ணிக் கண்ணாபிரானோடு என்னை இணைத்துக் கங்கண நூல்கட்டும் நிலைமையைக் கனவில் கண்டேனென்கிறாள்.

நனி – மிகுதியை உணர்த்தும் உரிச்சொல், மிகவும் என்றபடி நல்கு நல் – கொடுத்தல், இங்கு, ப்ரோக்ஷணம்செய்தல் ப்ராஹ்மண, என்ற வடசொல் பாப்பனன் எனத் திரிந்தது, பாப்பனர் – சிட்டர், பாப்பனச்சிட்டர், ப்ராஹ்மணயோநியிற் பிறப்புமாத்திரமின்றியே வேதங்களை நன்றாக ஓதி ஆசாரவ்யஹாரங்களில் ஒன்றுங்குறையாதிப்பவர்கள். “பல்லரண் டெடுத்தேத்தி“ என்பது அதுநிகர்களின் பாடம், வியாக்கியானத்தில் “ மங்களாசாஸநம்பண்ணி“ என்றருளிச் செய்திருப்பதைக்கண்டு பல்லாண்டு என்றபாடத்தைக் கற்பித்தனர்போலும், “பல்லார் எடுத்து ஏத்தி“ என்றபாடத்திற்கே வியாக்கியானம் நன்கு பொருந்தியிருக்குமாற்றைக் காண்மின்.

பூப்புனைகண்ணி – கல்யாணப்பெண்ணுக்கு உயர்ந்த சேலையாலும் சிறந்த பூஷ்ணங்களாலும் அலங்காரம் பண்ணினால், கலியாணப்பிள்ளைக்கு அவையெல்லாம் வேண்டாதே ஒரு புஷ்பஸரத்தாலே அலங்காரம் அமைந்தபடி புனிதன் – பரிசுத்தன் என்றபடி, ஸ்நாநம்பண்ணிக் கையும் பவித்திரமுமாய் வைதிகவேஷம் பூண்டு ஒருவர்மேலும் படாமல் மிக்க ஆசாரசீலனாயிருக்கு மிருப்புத் தோற்றப் புனிதம் என்கிறாள். ஆசாரம் சிறிதுகுறைந்தாலும் பெரியாழ்வார்பெண்பிள்ளையைக் கொடுக்கமாட்டார்களென்று கண்ணபிரான் மிக்க ஆசாரங்கொண்டாடுகிறபடி. புனிதனோடு என்றன்னை – புனிதனுக்கும் எனக்கும் என்றபடி. காப்புநாண் – மங்களார்த்தமான கங்கணஸூத்ரம். காப்புநாண்கட்டுகை புரோஹிதருடைய காரியமென்ப.

English Translation

I had a dream O sister! Scores of sages and seers chanted on a high key; they anointed us with waters from the four Quarters, and then tied the talisman-thread on our wrists.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top