(547)
மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்
காதலி யோடுடன் வாழ்குயி லேஎன் கருமாணிக் கம்வரக் கூவாய்
பதவுரை
| போது அவர் காலில் |
– |
சிறந்தபூக்கள் அலர்கின்ற சோலையிலே |
| புதுமணம் |
– |
புதிதான பரிமளமானது |
| நாற |
– |
வீச |
| பொறி வண்டின் |
– |
அழகிய வண்டினுடைய |
| காமரம் |
– |
காமரம் என்கிற பண்ணை |
| கேட்டு |
– |
கேட்டுக் கொண்டு |
| உன்காதலியோடு உடன் வாழ்குயிலே |
– |
உன் பேடையோடு கூட வாழ்கிற குயிலே! |
| மாதலி |
– |
மாதலியானவன் |
|
தேர் முன்பு (இராவணனுடைய) தேரின் முன்னே- |
||
| கோல் கொள்ள |
– |
கோலைக் கொண்டு தன் தேரை நடத்த |
| மாயன் இராவணன் மேல் |
– |
மாயாவியான ராவணன் மேலே |
| சாம்மாரி |
– |
பாணவர்ஷத்தை |
| தாய்தலை அற்று அற்று வீழ தொடுத்த |
– |
(அவ்விராவணனுடையப்ரதானமான தலை (பலகால்) அற்று அற்று விழும்படிப்ரயோகித்த |
| தலைவன் |
– |
எம்பெருமானுடைய |
| வரவு – |
– |
வரவை |
| எங்கும் |
– |
ஒருதிக்கிலும் |
| காணேன் |
– |
காண்கிறேனில்லை’ |
|
(ஆதலால்,)- |
||
| என் |
– |
என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய் |
| கரு மாணிக்கம் |
– |
நீலரத்நம் போன்ற திருமேனியையுடையனான அவ்வெம்பெருமான் |
| வர |
– |
இங்கே வரும்படியாக |
| கூவாய் |
– |
நீ கூவவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாதலியென்பவன் தேவேந்திரனுடைய தேர்ப்பாகன்’ எப்போதும் யுத்தக் களத்திலே இந்திரன் முதுகு காட்டியோடுவது தவிர ஒருநாளும் நிலைத்துநின்று போர் செய்தறியானாகையாலே அவனுடைய ஸாரதியான இந்த மாதலி ஒருநாளும் போர்க்களத்திலே தேர்முன்னே நின்று பாகுசெய்தறியான்’ அப்படிப்பட்டவன் இராமபிரானுடைய தேர்ப்பாகனாக அமைந்த போது தான் முன்னின்று கோல்கொள்ளும்படியான பாக்கியம் பெற்றான். அப்படி அவன் தேர்முன் நின்று கோல் கொள்ள, க்ருதிரிமயுத்தத்திலேயே கைதேர்ந்தவனான இராவணன் மேலே அம்புகளை மழைபொழிந்தாற் போலே பொழிந்து அவனுடைய தலைகளை யெல்லாம் அறுத்தறுத்துத் தள்ளின இராமபிரான் திடீரென்று எந்தத் திசையிலாவது வந்து தோன்றுவனா? என்று நான் சுற்றுங்காணாநின்றாலும் அவன் ஒருதிக்கிலும் வந்து தோன்றுகின்றானில்லையே! குயிலே நீயோ என்துயரை நோக்குகின்றாயில்லை’ மலர்ந்த புஷ்பங்கள் நிறைந்த சோலையானது நமக்கு வாய்ப்பாகக் கிடைத்து விட்டதென்று இந்தச் சோலையிலே இருந்துகொண்டு சிறந்த புஷ்ப வாஸனையை அநுபவித்துக் கொண்டும், ‘காமரம்’ என்னும் பண்ணைப் பாடித்திரிகிற வண்டுகளின் ஸங்கீத ஸாரஸ்யத்தை அநுபவித்துக் கொண்டும் பேடையைவிட்டு ஒரு க்ஷணகாலமும் பிரியாமல் நித்யஸம்ச்லேஷமாய் இதுவே ஆநந்தமாக என்னைப்பற்றிச் சிறிதும் கவலையின்றியே கிடக்கிறாயே! இதுவா தகுதி? அவ்வெம்பெருமான் இங்கே வரும்படி ஒருவிசை கூவினால் உன் வாய்முத்து உதிருமோ? என்செல்வமே! அப்படி ஒருகால் கூவிக்கான் என்று வேண்டுகிறாளாய்த்து.
மாதலி – வடசொல். கோல்-குதிரைகளை நடத்துங் கருவி. மாயனிராவணன்= ஸ்ரீ மாயாமிருகத்தை (மாரிசனை)ப் போகவிட்டுப் பிரிப்பதும், தான் கபடஸந்நியாசி வேஷம் பூண்டு போய்ப் பிராட்டியைக் கவர்வதுமான பல வஞ்சகக் செயல்களிலே வல்லவன். சரம் – பாணம்’ தற்சமவடசொல். “தாய் தலை” என்பதற்கு “ப்ரதானமான தலை” என்று பெரிவாச்சான் பிள்ளை கூறியிருத்தலால், “தாய்த்தலை” என்று தகரம் மிகாதொழிந்தது எதுகையின்பம் நோக்கியா மென்று கொள்க. அற்றற்றுலீழ = “திருச்சரங்கள் பண்ணின பாக்யத்தாலே (கலை) அறுக்கவறுக்க முளைத்தாய்த்த’ பின்னை அதுதானே போதுபோக்காக நின்று கொன்றானாய்த்து. அப்படி முளைத்ததில்லையாகில், திருச்சரங்களின் வரவு இவனால் அடக்கப்போகாதே.” என்பது வியாக்கியான ஸூக்தி. “வரவெங்கும்” என்றவிடத்து வர என்றும் பதம்பிரிக்கலாம் – எங்கும் வரக்காணேன் … (ங})
English Translation
The Lord went to war in Matali’s chariot raining arrows, and severed Ravana’s head one by one; he does not appear, alas O Koel living with your beloved in groves of wafting fragrance, sipping nectar from the fresh blossoms, go and call my gem-hued Lord.
