(539)
அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக ழும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே
பதவுரை
| அற்றவன் |
– |
(ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய் |
| மருதம் முறிய |
– |
யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக |
| ஈடை கற்றவன் |
– |
தவழ் நடை நடக்கக் கற்றவனாய் |
| கஞ்சனை |
– |
கம்சனை |
| வஞ்சனையில் |
– |
வஞ்சனையிலே |
| செற்றவன் |
– |
கொன்று முடித்தவனாய் |
| திகழும் மதுரை பதி கொற்றவன் |
– |
விளங்குகின்ற மதுதைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான் |
| வாரில் |
– |
வந்திடுவானாகில் |
|
கூடலே! கூடிடு-.- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ண பிரான் இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து சென்றதோர் அபதாநத்தையும் கஞ்சனைக் கொன்றவாற்றையும் நினைத்து அவற்றிலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.
மருத முறிய நடைகற்ற வரலாறு வருமாறு-கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுகின்ற பல விலையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை க்ருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற்கட்டி ஒருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருத மரத்தின் நடுவே எழுந்தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்துவிழுந்தவளவில் முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களாய்கிடந்த நளகூபரன் மணிக்ரிவன் என்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர். இந்த குபேரபுத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில் பல அப்ஸரஸ் ஸ்த்ரிகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரிடை செய்து கொண்டிருக்கையில் நாரதமா முனிவர் அங்கு எழுந்தருள மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்துநீங்க,. இந்த மைந்தர் மாத்திரம் மதுபாநமயக்கத்தினால் வஸ்த்ரமில்லாமலேயிருக்க நாரதர் கண்டுகோபங்கொண்டு ‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபிக்க உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி ‘நெடுங்காலஞ்சென்றபின்பு திருமால் உங்களருகே நெருங்குஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம் பெற்றுமீள்வர்’ என்று சாபவிடை கூறிப்போயினார். இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில், கம்ஸனால் ஏவப்பட்ட இரண்டு அஸுரர்களும் ஆவேசித்துக்கிடந்தனர் என்று கொள்ளல்வேண்டும்’ “ஒருங்கொத்தவிணை மருதம் உன்னியவந்தவரை” என்றும் “பொய்ம்மாயமருதான வசுரரை” என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்திருத்தலால்.
அற்றவன் – ஏற்கனவே “ஆண்டாளுக்கானவன் இவன்” என்னும்படி அற்றுத்தீர்ந்தவன். “பாரித்ராணாய ஸாதூரிநாம்-ஸம்பவாமியுகே” என்றிறே திருமுகப்பாசுரம்.
“அற்ற வல் மருதம் முறிய”- தன்னைக் கொல்லுவதாக நிக்சயித்துவந்த வலிய மருதமரங்கள் முறியும்படியாக என்று பொருள் கொள்ளக்கூடுமாயினும் ஸ்வரஸமன்று’ வியாக்கியமானத்திலுமில்லை.
கஞ்சனை வஞ்சனையிற் செற்ற வரலாறு-தன்னைக் கொல்லப்பிறந்த தேவகி புத்திரன் யசோதையிடம் ஒளித்துவளர்தல் முதலிய வரலாறுகளை நாரதர் சொல்லக் கேட்டுக் கம்ஸன் அதிக கோபங்கொண்டு க்ருஷ்ணனைக் கொல்ல நிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜவைத்துக் கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழிதேடுகையில் கம்ஸஸபையிலே கண்ணபிரான் வேகமாக எழும்பிக் கஞ்சனது மஞ்சத்தின் மேலேறி அவனது கிரிடம் கழன்று கீழேவிழும்படி அவனைத் தலைமயிர்பிடித்துத் தரையில் தள்ளி அவன் மேல் தான் விழுந்து அவனைக் கொன்றிட்டனன் என்பதாம்.
வஞ்சனையில் என்ற விடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்-“தர்மயுத்தமே வேணுமென்று பெருமாளைப் போலே யிருந்தானாகில் அவன்வஞ்சநமே தலைக்கட்டுமே’ அவன்நினைத்த வஞ்சநத்தை அவன்றன்னோட போக்கின்படி.”
கண்ணபிரான் கம்ஸனைக் கொன்றபின்பு, மகனிழந்தவனும் தன் மாதாமஹனுமாகிய உக்ரஸேந மஹாராஜனைத் தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகம் செய்துவைத்தானாகையாலே திகழும்மதுரைப்பதிங் கொற்றவன் உக்ரஸேநனேயாகிலும் கண்ணபிரானே ராஜா என்பது ஆண்டாளுடைய பக்ஷமாம். “??????????????????” “நஹி பாலந ஸாமா;த்ய மருதே ஸர்வேச்வரம் ஹாரிம்) என்றிறே ப்ரமாணப்ரஸித்தியும். “வாசுதேவன் மதுரை மன்னன்” என்றார் பெரியாழ்வாரும் (சு)
English Translation
As a child, Krishna toddled between two Marudu trees and uprooted them. Also he had entered the palace and killed Kamsa without fear or malice. He is the Lord, and King of the grand city of Mathura. If he will come, then join, O Lord-of-the-circle.
