(528)

(528)

காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி

வேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டிலென் னவிளை யாட்டோ

கோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே

கோலங் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்

பதவுரை

கரிய

கறுத்த
கோலம்

திருமேனியையுடைய
பிரானே

கண்ணபிரானே!
கயலொடு

கயல்மீன்களும்
வாளை

வாளை மீன்களும்
விரவி

ஒன்றாய்க் கூடி
காலை

(எமது) கால்களை
கதுவிடுகின்ற

கடியாநின்றன’

(இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு)

என் ஐமார்கள்

எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து

வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில்

(உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு

அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ

நீ
கோலம்

அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு

சிற்றாடைகளை யெல்லாம் வாரிக்கொண்டு
ஏறி இராது

(மரத்தின் மேல்) ஏறியிராமல்
குருந்திடை

குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை

(எங்கள்) சேலைகளை
பணியாய்

தந்தருள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானே! நீ செய்யும் தீம்புகளால் நாங்கள் படும் வருத்தம் எவ்வளவாயிருந்தது பாராய்’ நீயோ எங்களை நீர் நிலையை விட்டு வெளிவர வொட்டாமல் சேலைகளைப் பறித்துக் கூத்தாட்டங் காணாநின்றாய்’ அல்குல் மறையுமாறு நீரினுள்ளே நிற்கின்ற எங்களுடைய காலைக் கயல்மீன்களும் வாளை மீன்களும் கவ்விக் கடித்துத் துடிக்கச் செய்யாநின்றன. இவ்வாறு நீ எங்கள் திறத்தில் செய்யுந் தீமைகளை எமது தமையன்மார்கள் கேள்விப்படுவரேல் சீறிச்சடக்கென ஓடிவந்து உன்னை வேலால் உதைத்துத் துரத்துவார்கள்’ ஆனபின்பு விபரிதமாகத் தலைக்கட்டவல்ல விளையாட்டு உனக்கு என்? என்று ஆய்ச்சிகள் அச்சமுறுத்த, அதுகேட்ட கண்ணபிரான், ‘பெண்காள்! பிறகு வருவது வருக’ அதைப்பற்றி நான் இப்போது சிந்திப்பேனல்லேன்’ இப்போது என் கையில் அகப்பட்டுக்கொண்ட இச்சேலைகளை உங்களுக்குக் கொடுப்பதென்கிற சங்கதி இல்லை’ என்று – அரையிலே ஒன்றைச் சாத்துவது, தலையிலே ஒன்றைக் கட்டுவது, உத்தரியமாக ஒன்றை அணிவதாக, இப்படித் தன் திருமேனிக்குப் பரபாகமாம்படி நாநாவர்ணமான சேலைகளாலே அலங்கரித்து மிகுந்தவற்றைக் குருந்தமரத்தின் மேலேயிட்டு வைத்து, ‘பெண்காள்! அணிந்த இவை நமக்குத் தகுதியாயிருந்தபடி கண்டீர்களா? என் அலங்காரத்தை அழித்தோ நீங்கள் இவற்றை வேண்டுவது?’ என்றான்’ ‘பிரானே! உன் திருமேனியை அழகு பெறுத்துஞ் சேலைகளை நாங்கள் வேண்டுகின்றிலோம்’ குருந்தில் கிடக்கிறவற்றைத் தாராய்’ என்கிறார்கள்.

English Translation

The catfish and the Kayal fish are nibbling at our feet. What is the fun if my brothers take a staff and drive you away? Do not remain sitting on the tree with our beautiful clothes. O dark, lovely Lord, hand them down from the Kurundu tree.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top