(427)
பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய்
ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
பதவுரை
| பால்கடலுள் |
– |
திருப்பாற்கடலில் |
| பை அரவ இன் அணை |
– |
(பரந்த) பாடல்களையுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது |
| பள்ளி கொள்கின்ற |
– |
திருக்கண் வளர்ந்தருளா நின்ற |
| பரம மூர்த்தி |
– |
பரம சேஷியானவனே ! |
| உய்ய |
– |
(எல்லாவுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி |
| உலகு |
– |
லோகங்களை |
| படைக்க வேண்டி |
– |
ஸ்ருஷ்டிக்க விரும்பி |
| உந்தியில் |
– |
திருநாபிக் கமலத்தில் |
| நான் முகனை |
– |
பிரமனை |
| தோற்றினாய் |
– |
தோற்றுவித்தவனே! |
| அவயம் |
– |
பூமியிலுள்ள |
| மனிசர் |
– |
மனுஷ்யர்கள் |
| பொய் என்று எண்ணி |
– |
(நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய் நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக) |
| காலனையும் |
– |
யமனையும் |
| உடனே |
– |
கூடவே |
| படைத்தாய் |
– |
ஸ்ருஷ்டித்தருளினவனே! |
| ஐய |
– |
பரம பந்துலானவனே! |
| அரங்கத்து அரவு அணைப்பள்ளியானே! |
– |
இவர் என்னை காக்க வேண்டும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பரமமூர்த்தி) “மூர்த்திசப்தம்- ஐச்வர்யத்துக்கும் விக்ரஹத்துக்கும் வாசகமாகையாலே, இவ்விடத்தில் ஐச்வர்யவாசகமாய்க் கொண்டு,சேஷித்வத்தைச் சொல்லுகிறது” என்ற வியாக்கியாகவாக்கிய மறியத்தக்கது. மூன்றாமடியில், மணிசரை என்றவிடத்து, ஐ- அசை; அன்றி, உருபுமயக்கமுமாக “பொய்யை” என்கிறவித்தைப் பொய் என்று குறைந்துக் கிடக்கிறது. *** என்றபடி தனது கட்டளையான சாஸ்த்ரங்களை மீறி ஸ்வேச்சையாகக் கபடநடைகளில் ஒழுகுபவர்கள் இவ்வுலகத்தவர்கள் என்று எம்பெருமான் திருவுள்ளத்திற்கொண்டு, அவ்வக்காலங்களில் அவரவர்கள் செய்யும் பாபங்களுக்கீடாகத தண்டம் நடத்தியாகிலும் இவ்வுலகைக் காக்க வேணுமென்ற கருணையினால், சிக்ஷைக்குக்கடவனான யமனையும் படைத்தருளினமை மூன்றாமடியில் விளங்கும். காலன்- வடசொல். தோற்றினாய், படைத்தாய்- விளிகள்…. …. …. (ஓ)
English Translation
O Lord of Srirangam reclining in the milk Ocean on a hooded serpent! To create the blessed worlds you made Brahma appear on you lotus navel, and deciding that man shall remain a mortal, you also created Time, the Lord of death. My master, henceforth protect me, you must.
