(368)
கொம்பினார்பொழில் வாய்குயிலினம் கோவிந்தன்குணம் பாடுசீர்
செம்பொனார்மதிள் சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர்
நம்பனைநர சிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான்தன சின்னங்கள்இவ ரிவரென்றுஆசைகள் தீர்வனே.
பதவுரை
| கொம்பின் ஆர் |
– |
கிளைகளாலே நெருங்கின |
| பொழில் வாய் |
– |
சோலைகளிலே |
| குயில் இனம் |
– |
குயிர்களின் திரள் |
| கோவிந்தன் |
– |
கண்ணபிரானுடைய, |
| குணம் |
– |
சீர்மைகளை |
| படு |
– |
பாடாநிற்கப்பெற்றதும், |
| சீர் |
– |
சிறந்த |
| செம் பொன் ஆர் |
– |
செம்பொன்னாலே சமைந்த |
| மதிள் |
– |
மதிள்களாலே |
| சூழ் |
– |
சூழப்பட்டதும் |
| செழு |
– |
செழுமைதங்கிய |
| கழனி உடை |
– |
கழனிகளையுடையதுமான |
| திருக்கோட்டியூர் |
– |
திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்). |
| நம்பனை |
– |
(ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும் |
| நரசிங்கனை |
– |
நரஹிம்ஹரூபியுமான ஸர்வேச்வரனை |
| நலின்று |
– |
அநுஸந்தி |
| ஏத்துவரர்களை |
– |
துதிக்கும் பாகவதர்களை |
| கண்டக்கால் |
– |
(யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில் |
| இவர் இவர் |
– |
“இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் |
| எம்பிரான் தன |
– |
எம்பெருமானுடைய |
| சின்னங்கள் |
– |
அடையாளமாயிருப்பவர்கள்” |
| என்று |
– |
என்று அநுஸந்தித்து |
| ஆசைகள் |
– |
நெடுநாளாய்பிறந்துள்ள ஆசைகளை |
| தீர்வன் |
– |
தலைக்கட்டிக்கொள்வேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருக்கோட்டியூர் எம்பெருமானடியார்களை ஸேவிக்கும்போதே ‘அவ்வெம்பெருமான் ஸாத்விகர்களினால் ஸேவிக்கப்படுமவன்’ என்கிற லக்ஷணம் வெளியாமாதலால் ‘இவர்கள் எம்பெருமானது சிறப்பைத் தெரிவிக்கவல்ல சின்னங்கள்’ என்று அநுஸந்தித்து, யான் நெடுநாளாய்க் கொண்டுள்ள பலவகை ஆசைகளையுந் தீர்வேனென்கிறார். பாகவதர்களின் ஸேவை, பகவத் ஸேவையினும் அரிது என்பார் கண்ணடக்கால் என்கிறார். “மெய்யடியார்கள் தம், ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண் பயனாவதே” என்ற குலசேகராழ்வார் பாசுரமுங்காண்க. எம்பிரான் தன = தன -தன் அ – ; அ- ஆறனுருபு. சின்னம் -***. இவர் இவர் என்ற இரட்டிப்புக்குக் கருத்து – ஒவ்வொரு பாகவதையும் தனித்தனியே அநுஸந்திக்கை. காணவேணுமென்றும், கிட்ட வெணுமென்றும்-, கூடவே இருக்கவேணுமென்றும் இப்படி ஆசைகள் பலவாதல்பற்றி ஆசைகள் எனப் பன்மையாக் கூறினர். இவ்வகை ஆசைகளெல்லாம், காண்கையொன்றினாலேயே தீருமென்றது- பாகவத ஸேவாமாத் ரத்துக்குள்ள அருமையையுஞ் சிறப்பபையுங் கூறியவாறு.
English Translation
Flocks of koels in well watered groves sing of Govinda’s qualities, and fertile fields surround the grand fortified town of Tirukkottiyur, where devotees praise Narasimha with faith. Whenever I see them, I take them to be representatives of the Lord, and fulfill my yearning.
