(367)

(367)

நளிர்ந்தசீலன் நயாசல னபிமானதுங்கனை நாடொறும்

தெளிந்தசெல்வனைச் சேவகஙகொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்

குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்

விளைந்த்தானியமு மிராக்கர் மீதுகொள்ளகிலார்களே.

பதவுரை

நளிர்ந்த சீலன்

குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும்
நய அசலன்

நீதிநெறி தவறாதவரும்
அபிமான துங்கனை

இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும்
நாள்தொறும் தெளிந்த செல்வனை

நாடோறும் தெளிந்துவராநின்றுள்ள கைங்கர்யஸம்பத்தை யுடையவருமான செல்வநம்பியை
சேவகம் கொண்ட

அடிமை கொண்டவனாய்
செம் கண் மால்

செந்தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார்பக்கல்) மோஹமுடையனாய்
திருக்கோட்டியூர்

திருக்கோட்டியூரில்
குளிர்ந்து உறைகின்ற

திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய திருக்
கோவிந்தன் குணம் படுவார்

கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்

எழுந்தருளியிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர்

ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள்

அபஹரிக்க மாட்டார்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-“(நளிர்ந்த சீலன் இத்யாதி) “அவ்வமுக் கொன்றுமில்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கள், செல்வனைப்போலத் திருமாலே நானுமுனைக்குப்பழவடியேன்” என்ற அருளிச்செயல் இங்கு உணரத்தக்கது. நயாவலன் – வடசொல் தொடர்; நுயெ *** நீதிநெறியில் சலிப்பற்றவன். ***  – ஸாத்விகாஹங்காரத்தாற் சிறந்தவன்.

சிறந்தகுணகணங்க ளமைந்த செல்வநம்பிக்யை அடிமை கொண்டருளின திருக்கோட்டியூ ரெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடும் ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளியிருக்கும் நாட்டில் விளையும் தாக்யங்களைக் கூட ராக்ஷஸர் அபஹரிக்கவல்லரல்லர்; தமக்கும் தம் பந்துக்களுக்குமாகச் சேமித்த தாந்யமாகிலன்றோ ராக்ஷஸர் அபஹரிக்கலாவது என்பது உள்ளுறை. தானியம் – ***ம். தானியமும் என்ற உம்மை – இழிவுசிறப்பும்மை; வருத்தமின்றிக் கொள்ளைகொள்ளுகைக்குப் பாங்காக வயல்களில் விளைந்துள்ள தாந்யத்தையே கொள்ளைகொள்ளமாட்டாத அரக்கர், மற்றவற்றைக் கொள்ளையிட எங்ஙனே வல்லவராவர்? என்பது ஆராயத்தக்கது.

English Translation

The red-eyed-Lord Senkanmal of Tirukkottiyur engage the genteel, just and respectable Selvanambi in his service; he lives amidst devotees who sing Govinda’s names. Even Rakshasas will not steal their paddy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top