(363)
உரகமெல்லணை யான்கையில் உறை சங்கம்போல்மட வன்னங்கள்
நிரைகணம்பரந் தேறும்செங்கம லவயல்திருக் கோட்டியூர்
நரகநாசனை நாவிற்கொண்டழை யாதமானிட சாதியர்
பருகுநீரும் உடுக்குங்கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ.
பதவுரை
| உரகம் மெல் |
– |
திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான |
| அணையான் |
– |
படுக்கையாகவுடைய எம்பெருமானது |
| கையில் உறை |
– |
திருக்கையில் உள்ள |
| சங்கம் போல் |
– |
ஸ்ரீ பாஞ்சஜந்யம்போல் (வெளுத்த) |
| மட அன்னங்கள் |
– |
மடப்பம்பொருந்திய ஹம்ஸங்களானவை |
| ஏறும் |
– |
ஏறியிருக்கப்பெற்ற |
| செம் கமலம் |
– |
செந்தாமரை மலர்களையுடைய |
| திருக்கோட்டியூர் |
– |
திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்) |
| நரகம் நாசனை |
– |
(தன்னடியார்க்கு) நரகப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை |
| நாவில் கொண்டு |
– |
நாவினால் |
| மானிட சாதியர் |
– |
மநுஷ்யஜாதியிற் பிறந்தவர்கள் |
| பருகும் |
– |
குடிக்கின்ற |
| நீரும் |
– |
தண்ணீரும் |
| உடுக்கும் |
– |
உடுத்துக்கொள்ளுகிற |
| கூறையும் |
– |
வஸ்திரமும் |
| பாவம் செய்தன தான் கொல் ஓ |
– |
பாவஞ்செய்தனவோ தான்!: |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-“ நாமம், ரூபம் என்ற இரண்டையுமுடைய எல்லாப் பொருள்களிலும் ஒவ்வொரு ஜீவன் அதிஷ்ட்டதனா யிருக்கின்றனென்பதைப் பிரமான பலத்தினாற் கொள்ளவேணும்; தும்பு முதலிவற்றில் உள்ள ஜீவாயிஷா நத்தை நாங்ககாணாதொழிவதற்குக் காரணம் – நமது கருமமடியாகப் பிறந்துள்ள ஞானச்சுருக்கமேயாம்; ஆகையாலே, “பருகு நீரு முடுக்குங் கூறையும் பாவஞ் செய்தனதான் கொலோ” என்பது பொருந்துமென்க. உலகத்தில் ஒருவன் நிஹீக புருஷனுக்கு ஆட்பட்டானாகில், அவன் நன்மையியழந்து தீமையையே பெறுவதும். விலக்ஷண புருஷனுக்கு ஆட்பட்டவன் தீமையைத் தவிர்த்து நன்மையையே பெறுவதும் சாஸ்திரங்களிற் கைகண்ட அர்த்தமாகும்; அப்படி தீமைக்கு ஹேதுமான நிஹீகபுருஷசேஷத்துவம் நேருவதற்குக் காரணம் அவனுடைய பாபமே யென்பதும் சாஸ்திரஸித்தம். ஆனதுபற்றி திருக்கோட்டியூரெம்பெருமானை அநுஸந்திக்கமாட்டாத நிஹீகபுருர்களுக்குச் சேஷப்பட்ட பருகுநீரும் உடுக்குங்கற்றையும் பாவம்செய்தனவோ தான்! என்கிறார்.
????????????????????????????????????? என்ற ஸ்ரீவிஷ்ணுதர்மச்லோகம் இங்கு அறியற்பாலது. மிகவும் பெறுவதற்கரிய மநுஷ்ய ஜந்மத்தைப் பெற்றுவைத்தும் அதன்பயனை யிழப்பதே என்ற வருத்தந்தோற்றக் கூறுகின்றார் – மானிட சாதியர் என்று.
செந்தாமரை மலர்களின் (வெளுத்த) அன்னப்பறவைகள் இருப்பது எம்பெருமான் திருக்கையில் பாஞ்ச்சன்னியம் இருப்பதுபோலும் என முன்னடிகளில் உத்ப்ரேக்ஷித்தவாறு. உரகம் -??????? சங்கம்-?????????? அன்னம்-????????? கணம்-???????????. நரகநாசன்-?????????? மானிடசாதியர்-?????????.
English Translation
The serpent-reclining Lord resides in Tirukkottiyur, surrounded by fields where graceful swans resembling the conch in his lotus-like hand throng the red-lotus lake. Having gained the birth of a human life, if one does not call ‘destroyer-of-hell’ and take the Lord’s name, surely the water one drinks, and the cloth one wears have done much sin, alas!
