(327)

(327)

வாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்கண்டு

சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்

பாராரும் புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான் பாடல்வல்லார்

ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.

பதவுரை

வார் ஆரும்

கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை

முலையையும்
மடலாள்

மடப்பத்தையுமுடையவளான
வைதேவிதனை

ஸீதாபிராட்டியை
கண்டு

பார்த்து
சீர் ஆரும்

சக்தியையுடையவனான
திறல்

சிறிய திருவடி
தெரிந்து

(பெருமாளிடத்தில்  தான்) அறிந்து கொண்டு.
உரைந்து

(பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்

அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்

பூமியெங்கும் பரவின கீர்த்தியையுடையராய்
புதுவை

ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்

பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்

ஓதவல்லார்கள்
எர் ஆரும் வைகுந்தத்து

வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு

நியத்ஸூரிகளோடு
இருப்பார்

கோவையாயிருக்கப் பெறுவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு, சீராருந் திறலநுமன்- வாநரர்கள் பலரிருக்கச் செய்தேயும் ‘இவனே இக்காரியஞ் செய்யவல்லான்’ என்று பெருமாள் திருவுள்ளம்பற்றி அடையாளங்களுஞ் சொல்லித் திருவாழியுங் கொடுத்துவிடும்படி ஜ்நுõகாதி குணங்களால் பரிபூர்ணனாய், நினைத்து முடிக்கவல்ல சத்தியமானாயிருக்கிற திருவடி.

அடிவரவு:-  நெறி அல்லி கலக்கிய வாரணி மான் சித்திர மின் மைத்தகு திக்கு வாராரும் கதிர்.

English Translation

This decad of sings by world famous Pattarbiran of Puduvai, Srivilliputtur, sing about the proofs that the mighty strong Hanuman knowingly said on seeing the corseted Sita is Asoka Vana. Those who master it shall live with the gods in good Vaikunta.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top