(284)

(284)

கருங்கண் தோகைமயிற் பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை

அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொரு வன்குழ லூதின போது

மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்

இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே.

பதவுரை

கருங்கண்

கறுத்தகண்களையுடைய
தோகை

தோகைகளையுடைய
மயில் பீலி

மயில்களின் இறகுகளை
அணிந்து

(திருமுடி மேல்) அணிந்து கொண்டு
நன்கு கட்டி உடுத்த

நன்றாக அழுந்தச் சாத்தின
பீதகம் ஆடை

பீதம்பரத்தையும்
அரு கலம்

அருமையான ஆபரணங்களையும்
உருவின்

திருமேனியை யுடையனான

ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது;

மரங்கள்

(அசேதநமான) மரங்களுங் கூட
நின்று

ஒருபடிப்பட நின்று

(உள்ளுருகினமை தோற்ற)

மதுதாரைகள்

மகரந்த தாரைகளை
பாயும்

பெருக்கா நின்றன;
மலர்கள்

புஷ்பங்களும்
வீழும்

(நிலைகுலைந்து) விழாநின்றன;
வளர்

மேல்நோக்கி வளர்கின்ற
கொம்புகள்

கொம்புகளும்
தாழும்

தாழாநின்றன;
இரங்கும்

(அம்மரங்கள் தாம்) உருகாநின்றன
கூம்பும்

(கைகூப்புவாரைப்போலே, தாழ்ந்த கொம்புகளைக்) குவியா நின்றன;

(இவ்வாறாக)

அவை

அந்த மரங்கள்
திருமால் நின்றநின்றபக்கம்நோக்கி

கண்ணன் எந்த எந்தப் பக்கங்களில் நிற்பனோ, அவ்வப்பக்கங்களை நோக்கி,
செய்யும் குணம் ஏ

செய்கின்ற வழிபாடுகள் இருந்தபடி யென்!

[என்று வியக்கிறபடி]

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் குழலூதும்போது அறிவுக்கு யோக்கியதையேயில்லாத மரங்கள் செய்தவைகளை விரித்துரைக்கின்றார். பின்னடிகளால் கண்ணபிரான் குழலூதிக்கொண்டு நிற்கும் பக்கங்கள் பல உண்டு; அவற்றுள் ஒருபக்கத்தில் மகரந்தவர்ஷத்தைப்பண்ணும், மற்ற பக்கத்தில் புஷ்பவர்ஷத்தைப்பண்ணும், வெறொரு பக்கத்தில் கிளைகளைத் தாழ்த்தி நிழலைவிளைக்கும்; தம்மிலேதாம் உருகியும் நிற்கும்; எமக்கருள் செய்யவேணுமென்று அஞ்சலி பண்ணுவதுபோலக் கொம்புகளைக் கூப்பாநிற்கும்; இவ்வாறாக மரங்கள் கண்ணபிரான் திறந்து வழிபட்டபடியே யான் என்னென்று கூறுவேன் என்கிறார்

பாயும், வீழும், தாழும் என்ற முற்றுக்களுக்கு, பாய்ச்சும், வீழ்த்தும் தாழ்த்தும் என்று பிறவினைப் பொருள்கள்வதிற் குறையொன்றுமில்லையென்க. இவ்வினைகளையெல்லாம் மரங்களுடையனவாக உரைத்தலிலுள்ள சுவையை நுண்ணிதினுணர்க.

English Translation

The beautiful cowherd Lord is adorned with peacock feathers having dark centre spots, and many jewels over his properly-worn yellow vestmerts. When he played his flute, the trees stood enchanted, and rained streams of nectar, poured flowers, and bent their upper branches in every which way the stood. Oh, the things they did in supplication.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top