(278)

(278)

தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி

கான கம்படி உலாவி யுலாவிக் கருஞ்சிறுக் கன்குழ லூதின போது

மேனகை யொடுதி லோத்தமை அரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி

வானகம் படியில் வாய்திறப் பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே.

பதவுரை

தேனுகன்

தேநுகாஸுரன்
பிலம்பன்

ப்ரலம்பஸுரன்
காளியன்

காளியநாகம்
என்னும்

என்று சொல்லப்படுகிற
தீப்பபூடுகள் அடங்க

கொடிய பூண்டுகளையெல்லாம்
உழக்கி

தலையழித்துப்போகட்டு
கான் அகம்

காட்டுக்குள்ளே
படி

இயற்கையாக
உலாவி உலாவி

எப்போதும் உலாவிக்கொண்டு
கரு

கரியதிருமேனியையுடைய
சிறுக்கன்

சிறுபிள்ளையான கண்ணன்

குழல் ஊதினபோது;

மேனகையொடு

மேனகையும்
திலோத்தமை

திலோத்தமையும்
அரம்பை

ரம்பையும்
உருப்பசி

ஊர்வசியும் (ஆகிற)
அரவர்

அப்ஸரஸ் ஸ்த்ரீகள்

(அக்குழலோசையைக் கேட்டு)

மயங்கி

மோஹமடைந்து
வெள்கி

வெட்கப்பட்டு
வான் அகம்

தேவலோகத்திலும்
படியில்

பூலோகத்திலும்
வாய் திறப்பு இன்றி

வாயைத் திறவாமல்
ஆடல் பாடல் இவை

ஆடுகை பாடுகை என்கிற இக்காரியங்களை
தாமே

தாமாகவே
மாறினர்

விட்டொழிந்தனர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-கானகமென்றது – விருந்தாவனத்தை யென்றுணர்க. அவ்விடத்தில் கண்ணபிரான் ஊதுகின்ற குழலினிசையைக் கேட்ட மேனகை முதலிய மேம்பட்ட மாதரும் “இனி நாம் ஆடுகையாவதென், பாடுகையாவதென்!” என்று நாணங்கொண்டு பிறருடைய ஏவுதலின்றித் தாமாகவே அந்த நித்தியகர்மாநுஷ்டாநத்தைத் தவிர்ந்தனர்; எனவே கண்ணபிரானுடைய விலாஸங்களின் திறம் வீறு பெற்றுள்ளமை விளங்கும். தேவமாதர் ஆடும்போதை நடையழகையும், பாடும் போதைப் பாட்டின்பத்தையும் கண்ணபிரானது நடையழகும் குழலோசையும் வென்றன வென்றவாறு. வாய்திறப்பின்றி – “இனி நாம் வானிலும் நிலத்திலும் ஆட, பாட என்று வாயாலுஞ் சொல்லக்கடவோமல்லோம்”” என்று ஆணையிட்டுக்கொண்டபடி “உருப்பசியர் அவர்”” என்று பிரிக்கவேணுமென்பர் பலர்.

தேனுகன் – கழுதையின் வடிவங்கொண்டு நலியவந்த அஸுரன். ப்ரலம்பாஸுரனைக் கொன்றவன் பலராமனாயிருக்க, கண்ணன் கொன்றதாகக் கூறியது, ஒற்றுமை நயம் நீக்கியென்க. பூண்டுகளென்றது-புன்மைபற்றி.. கானகம்படி-காட்டு நிலத்திலே என்றுமாம்.

English Translation

As easily as pulling out deadly weeds, the dark child Krishna killed Dhenuka, Pralamba, Kaliya and others, who roamed in the forest freely. When he played flute, Menaka in the company of Tillottama, Ramba, Urvasi and other Apsaras listened, enchanted and shamed, then silently,–on their own,–gave up singing and dancing in Heaven and on Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top