(263)
விண்ணின் மீதுஅம ரர்கள்விரும் பித்தொழ மிறைத்துஆயர் பாடியில் வீதியூடே
கண்ணங் காலிப்பின் னேஎழுந் தருளக் கண்டுஇளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில்புது வையர்கோன் விட்டு சித்தன் சொன்ன மாலைபத்தும்
பண்ணின்பம் வரப்பாடும் பத்த ருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.
பதவுரை
| விண்ணின் மீது |
– |
பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே |
| அமரர்கள் |
– |
நித்யஸூரிகள் |
| விரும்பி |
– |
ஆதரித்து |
| தொழ |
– |
ஸேவியாநிற்கச்செய்தேயும் |
| கண்ணன் |
– |
ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா |
| மறைத்து |
– |
(அவர்களை மதியாமல்) மேனாணித்து |
| ஆயர்பாடியில் |
– |
திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து) |
| வீதி ஊடே |
– |
தெருவேற |
| காலி பின்னே |
– |
பசுக்களின் பின்னே |
| எழுந்தருள |
– |
எழுந்தருளா நிற்க, |
|
(அவ்வழகை) |
||
| இள ஆய் கன்னிமார் |
– |
யுவதிகளான இடைப் பெண்கள் |
| கண்டு |
– |
பார்த்து |
| காமுற்ற வண்ணம் |
– |
காமலிகாரமடைந்த படியை, |
| வண்டு அமர்பொழில் |
– |
வண்டுகள் படிந்த சோலைகளையுடைய |
| புதுவையர் கோன் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான |
| விட்டு சித்தன் |
– |
பெரியாழ்வார் |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| மாலை பத்தும் |
– |
சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் |
| இன்பம் வர |
– |
இனிமையாக |
| பண் |
– |
பண்ணிலே |
| பாடும் |
– |
பாடவல்ல |
| பக்தருள்ளார் |
– |
பக்தர்களா யிருக்குமவர்கள் |
| பரமான |
– |
லோகோத்தரமான |
| வைகுந்தம் |
– |
ஸ்ரீவைகுண்டத்தை |
| நண்ணுவர் |
– |
அடையப்பெறுவார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளனைவரும் தன்னைத் தொழா நிற்கவும் எம்பெருமான் அவ்விடத்தே வீற்றிருந்து தனது பரத்துவத்தைப் பாராட்டலாமாயிருக்க, அங்ஙன் செய்யாது இடைச்சேரியில் வந்து பிறந்தது தனது ஸௌசீல்யத்தை வெளிப்படுத்துகைக்காகவென்க. காமுற்ற – ‘காமம் உற்ற’ என்பதன் தொகுத்தல். பக்தர் – —?. இப்பாட்டால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு.
அடிவரவு :- தழை வல்லி சுரிகை குன்று சுற்றி சிந்துரம் சால சிந்துரப்பொடி வலம் விண் அட்டு.
English Translation
This decad of songs by Vishnuchitta, King of Srivilliputtur of bee-humming groves recalls how the young cowherd girls expressed their desires on seeing Krishna in the streets returning with the cows, evading the gods in heaven who waited to worship him. Devotees who can sing it musically evoking joy will enter Vaikunta.
