(249)

(249)

அஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு

நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன்

என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை

கஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.

பதவுரை

அம் சுடர்

அழகிய ஒளியையுடைய
ஆழி

திருவாழியாழ்வானை
கை அகத்து

திருக்கையிலே
ஏந்தும்

தரியாநின்றுள்ள
அழகா

அழகப்பிரானே!

நீ;

பொய்கை

(காளியன் கிடந்த) பொய்கையிலே
புக்கு

போய்ப் புகுந்து

(அவ்விடத்தில்)

பிணங்கவும்

சண்டைசெய்தபோதும்
நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்

நான் ஜீவித்திருந்தேன்;
என் செய்ய

ஏதுக்காக
என்னை

என்னை

(இப்படி)

வயிறு மறுக்கினாய்

வயிறு குழம்பச்செய்கின்றாய்;
ஏது ஓர் அச்சம் இல்லை

(உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே;
காயாம் பூ வண்ணம் கொண்டாய்

காயாம்பூப் போன்ற வடிவுபடைத்தவனே!
கஞ்சன்

கம்ஸனுடைய
மனத்துக்கு

மநஸ்ஸுக்கு
உகப்பனவே

உகப்பாயுள்ளவற்றையே
செய்தாய்

செய்யாநின்றாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியில் ‘உன்’ என்றது-வார்த்தைப்பாடு; பொருளில்லை. கண்ணபிரானே! நீ அன்றொருகால் காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட, அவன் தன் உடலாலே உன்னைகட்ட அதை உதறிப்பொகட்டு அவனுச்சியின் மீதேறி அவன் வாலைப்பிடித்துக் கொண்டு நின்று திளைத்து அவன் வாயாலே ரத்தம் கக்கும்படி ஆடி இப்படியாய்க் கொண்டு அந்யோந்யம் பிணங்கினபோது நான் உயிர்தரித்திருக்கப் பட்டபாடு பகவானறியும்; நீயோவென்றால் இறையுமஞ்சுகிறிலை; உன்னைக்கொல்ல ஸமயம் பார்த்திருக்கின்ற கம்ஸன் தன் மனோரதம் நிறைவேறப்பெற்று மகிழும்படியாகக் காட்டுக்குச் சென்று கண்டவிடமெங்குந் திரியாநின்றாய்; இப்படிகளை நினைத்தால் என்வயிறு குழம்புகின்றது; இப்படி என்குடலைக் குழப்புவதனால் நீ பெறும்போது என்னோ? அறிகிலேன் என்கிறாள். [காயாம்பூ இத்யாதி.] இவ்வடியின் பெருமயை நினைக்கிறாயில்லையே! என்றவாறு. “வேண்டினபடியாகிறது, இவ்வடிவுக்கு ஒரு வைகல்யம் வாராமல் பிழைக்கப் பெற்றேனே யென்கை” என்பது ஜீயருரை. மறுக்கினாய் என்பதற்கு ‘மறுக்கின்றாய்’ என்றும், செய்தாய் என்பதற்குச் ‘செய்கின்றாய்’ என்றும் நிகழ்காலப்பொருள் கொள்ளல் தகும்; இது வழுவமைதியின் பாற்படும்: “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி”” என்றார் நன்னூலார்.

English Translation

O, Beautiful One bear in a radiant conch in your hand! When you entered the lake and wrestled with the venom-spitting serpent, I lived through it; my stomach turned. Why did you do it? You have no fear. O Kaya-hued Lord, you go on doing things that please Kamsa’s heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top