(161)
கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல்புது வைக்கோன் பட்டர் பிரான்சொன்ன பாடல்
சீர்மல செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே.
பதவுரை
| கார் |
– |
காளமேகத்திற் காட்டிலும் |
| மலி |
– |
சிறந்த |
| மேனிநிறத்து |
– |
திருமேனி நிறத்தையுடைய |
| கண்ணபிரானை |
– |
கண்ணபிரானை |
| உகந்து |
– |
விரும்பி |
| வார்மலி |
– |
கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற |
| கொங்கை |
– |
ஸ்தனங்களையுடைய |
| அசோதை |
– |
யசோதைப் பிராட்டி |
| மஞ்சனம் ஆட்டிய |
– |
நீராட்டின |
| ஆற்றை |
– |
ப்ரகாரத்தை,- |
| பார் |
– |
பூமியிலே |
| மலி |
– |
சிறந்த |
| தொல் |
– |
பழமையான |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு |
| கோன் |
– |
நிர்வாஹகரான |
| பட்டர்பிரான் |
– |
பெரியாழ்வார் |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| சீர்மலி |
– |
அழகு நறைந்த |
| செந்தமிழ் |
– |
செந்தமிழாலாகிய |
| பாடல் |
– |
(இப்) பாசுரங்களை |
| வல்லார் |
– |
ஓத வல்லவர்கள் |
| யாதும் |
– |
சிறிதும் |
| தீவினை இலர் |
– |
பாவமில்லாதவராவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க.
அடிவரவு – வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.
English Translation
These perfect songs of exceedingly sweet Tamil by Pattarbiran, King of ancient Puduvai town, recall how the full-breasted Yasoda gave a bath to the Lord Sri Krishna of hue darker than the deep ocean. Those who master it will have no evil Karma.
