(104)
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.
பதவுரை
|
(வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப்புகும்போது அதுகண்ட மஹாபலிபுத்ரனான நமுசி ஓடிவந்து) |
||
| இது |
– |
(யாசிக்கும்போதிருந்த வடிவம் மாறியளக்கிற) இது |
| என் மாயம் |
– |
என்ன மாயச் செய்கை!; |
| என் அப்பன் |
– |
என் தகப்பன் |
| அறிந்திலன் |
– |
(நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை |
| முன்னைய வண்ணமே கொண்டு |
– |
நீ யாசிக்கவந்தபோதிருந்த வடிவத்தையே கொண்டு |
| அளவாய் |
– |
அளப்பாயாக |
| என்ன |
– |
என்று சொல்ல |
| மன்னு |
– |
(இப்படி) பிடிவாதமாய் நின்ற |
| நமுசியை |
– |
(அந்த) நமுசியென்பவனை |
| வானில் |
– |
ஆகாசத்திலே |
| சுழற்றிய |
– |
சுழலச்செய்த |
| மின்னுமுடியனே |
– |
விளங்குகின்ற கிரீடத்தையுடையவனே! |
|
அச்சோ அச்சோ-; |
||
| வேங்கடம் |
– |
திருமலையிலே |
| வாணனே |
– |
வாழுமவனே! |
|
அச்சோ அச்சோ-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – நமுசி திரிவிக்கிரமனோடு வெகுநாழிகை வழக்காடி எம்பெருமான் சொன்ன ஸமாதாநங்களைக்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருக்க எம்பெருமான் வளர்ந்த திருவடியினால் அவனை ஆகாசத்திலே கொண்டுபோய் சுழன்று விழும்படி செய்த வரலாறு காண். சுழற்றிய என்ற பெயரெச்சம் முடியனைக் கொண்டு முடியும்.
English Translation
When Bali’s son Namushi protested, “What trick is this? My father did not know. You must resume your old form and measure the land”, you hurled him into the sky. O Radiance-crowned Lord of Venkatam, come Acho, Acho!
