(102)

(102)

போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான்

தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்

காரொக்கும் மேனிக் கரும்பேருங் கண்ணனே

ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ.

பதவுரை

இ பூமி

இந்தப் பூமியினுடைய
பொறை

பாசத்தை
தீர்ப்பான்

தீர்ப்பதற்காக
போர்

யுத்தத்தை
ஒக்க

(துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி

செய்து
செழு

செழுமைதாங்கிய
தார்

மாலையையுடைய
விசயற்கு ஆய்

அர்ஜுநனுக்காக
தேர்

(அவனுடைய) தேரை
ஒக்க

(எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்

பாகனாய்ச் செலுத்தினவனே!
நார் ஒக்கும்

மேகத்தோடு ஒத்த
மேனி

திருமேனியில்
கரும்பெருங் கண்ணனே

கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே!
வந்து

ஓடிவந்து
ஆர

நின்றாக
தழுவா

தழுவிக்கொண்டு

அச்சோ அச்சோ-;

ஆயர்கள்

இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற)
போர் ஏறே

போர்செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!

அச்சோ அச்சோ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – துர்யோதனாதிகளுக்குப் பதினொரு அக்ஷௌஹிணிகேனையும் பாண்டவர்களுக்கு ஏழு அக்ஷௌஹிணி சேனையுமாயிருக்கவும் இவ்விருதிற்டதாரும் போர்செய்யும்போது இருவரும் சரிசமமாகவே யுத்தஞ் செய்பவர்களாகவே நிற்குமாறு செய்தனன் கண்ணபிரானென்க.  பகைவர்களோடு போர்புரியும் போது தும்பைப்பூமாலையும் வெற்றிகொண்டபோது வாகைப்பூமாலையும் வீரர் சூடுவரெனக் கூறுதல் தமிழர் வழக்கமாதலால் இவ்விரு பூமாலையையும் அவ்வப்போது அர்ஜுநன் அணிவனென்பதைத் தெரிவிக்க பொதுவாகச் ‘செழுந்தார்விசயன்’ என்றார்.  விசயன் – அர்ஜுனனுக்கு ‘விஜயன்’ என்று வடமொழி நாமம்.

English Translation

O Dark cloud-hued Lord! You drove the chariot for the victory of garlanded Arjuna in a fierce battle and the world of its burden of despot kings! O Fierce Bull of the cowherd clan, come and caress me, Acho, Acho!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top