(63)
மைத்தடங் கண்ணி யசோதை தன்மக னுக்குஇவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனை யும்சொல்ல வல்ல வர்க்குஇட ரில்லையே
பதவுரை
| மை |
– |
மையணிந்த |
| தட |
– |
விசாலமாயிராநின்ற |
| கண்ணி |
– |
கண்களையுடையளான |
| அசோதை |
– |
யசோதையானளவள் |
| தன் மகனுக்கு |
– |
தன் மகனான கண்ணனுக்கு |
| ஒத்தன சொல்லி |
– |
நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி |
| உரைத்த |
– |
(சந்திரனை நோக்கிச்)சொன்ன |
| இவை மாற்றம் |
– |
இப்பாசுரத்தை |
| ஒளி |
– |
ஒளிபொருந்திய |
| புத்தூர் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய் |
| வித்தகன் |
– |
(மங்களாசாஸநி) ஸமர்த்தரான |
| விட்டுசித்தன் |
– |
பெரியாழ்வாராலே |
| விரித்த |
– |
விரித்து அருளிச்செய்யப்பட்ட |
| தமிழ் |
– |
த்ராவிட பாஷாரூபமான |
| இவை |
– |
இப்பாசுரங்கள் பத்தையும் |
| எத்தனையும் |
– |
ஏதேனுமொருபடியாக |
| சொல்லவல்லவர்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
| இடர் இல்லை |
– |
துன்பமொன்றுமில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – யசோதைப் பிராட்டியானவள் சந்திரனை நோக்கித் தன்மகனுடைய கருத்துக்கு இணங்கின வார்த்தைகளை (‘சந்திரா! வா’ இத்யாதிகளைச்) சொல்லி அச்சமுறுத்தியும் புகழ்ந்தும் பேசின பாசுரங்களை நான் அவளுடைய பாவனைகொண்டு பேசினேன்; இப்பாசுரங்களை எவ்விதமாகவாவது வாய்விட்டுச் சொல்லவல்லவர்கட்குத் துன்பமெல்லாம் நீங்கி ஆநிந்தம் விளையுமென்று – இத் திருமொழிகற்றார்க்குப் பலன்சொல்லித் தலைகட்டினாராயிற்று. நான்காடியில் எத்தனையும் என்றது – யதாசக்தி என்றபடி.
அடிவரவு – தன் என் சுற்றும் சக்கரம் அழகிய தண்டு பாலகன் சிறியன் தாழி மை உய்ய.
English Translation
This decad of sweet Tamil songs by Vishnuchitta, resident of bright Puduvai, recalls the words of bright collyrium-eyed Yasoda, spoken on her son’s behalf. Those how can recite it in any manner will have no despair.
