(62)
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.
பதவுரை
| மா மதீ!; | ||
| தாழியில் |
– |
தாழியிலே (சேமித்திருக்கிற) |
| வெண்ணெய் |
– |
வெண்ணெயை |
| தட |
– |
பெரிதான |
| கைஆர |
– |
கைநிறைய (அள்ளி) |
| விழுங்கிய |
– |
அமுதுசெய்த |
| பேழை வயிறு |
– |
பெருவயிற்றையுடையவனான |
| எம்பிரான் |
– |
என் கண்ணபிரான் |
|
உன்னை கூவுகின்றான்; |
||
|
(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக) |
||
| ஆழிகொண்டு |
– |
திருவாழியாலே |
| உன்னை எறியும் |
– |
உன்னை வெட்டிவிடுவேன்; |
| ஐயுறவு இல்லை |
– |
ஸம்சயமேயில்லை; |
|
(இதில் நின்றுந்தப்பி) |
||
| வாழ உறுதியேல் |
– |
வாழக்கருதினாயாகில் |
|
மகிழ்ந்து ஓடிவா |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சந்திரா! இவன் உன்னை விரும்பி அழைக்கின்றவிது வெண்ணெயை வாரி விழுங்கின செய்திபோலே ஆசையின் கனத்தினாலானது என்னுங்கருத்துப்பட முன்னடிகளருளிச் செய்தபடி. அவ் வெண்ணெய்த் தாழியை இவனுக்கு எட்டாதபடி வைத்தால் கல்லை விட்டெறிந்து அந்தத்தாழியை உடைப்பதுபோல நீயும் வாராதிருந்தால் இவன் சக்ராயுதத்தை உன்மீது பிரயோகித்து உன் தலையையறுத்திடுவான்; இதில் கொஞ்சமேனும் ஸந்தேஹமில்லை; இப்படி இவனுடைய நிக்ரஹத்துக்கு இலக்காகி முடிந்து போகாமல் பிழைத்திருக்க விரும்புவாயாகில் பெருந்தன்மையாய் வந்துவிடு என்பது பின்னடிகளின் கருத்து.
English Translation
O, Big Moon! Look my master who lowered his long arms into the pot and filled his bulging belly with butter calls you. He will spin his discus on you, there is no doubt. If you wish to live, come running willingly.
