(10)

(10)

எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட

அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்

செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய

பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பதவுரை

எம்பெருமான்

ஸ்வாமிந்!
உன்தனக்கு

தேவரீர்க்கு
அடியோம் என்று

நாங்கள் அடிமைப்பட்டவர்கள் என்று
எழுத்து

சொல்லானது
பட்ட நாள்

எங்களுடைய வாயில் உண்டாகப்பெற்றநாள்
எந்நாள்

எந்த தினமோ,
அந்நாளே

அந்த தினம் முதலாகவே
அடியோங்கள்

அடியோங்களுடைய
அடிகுடில்

அடிமைப்பட்ட ஸந்தானமெல்லாம்
வீடுபெற்று உயந்ததுகாண்

நல்ல கதியையடைந்து உஜ்ஜீவித்துவிட்டது
செம் நாள் தோற்றி

நல்ல நக்ஷத்திரத்திலே திருவவதரித்து
திரு மதுரையுள்

அழகிய வடமதுரையிலே

(கம்ஸனுடைய ஆயுதசாலையில் புகுந்து)

சிலை குனித்து

வில்லை வளைத்து முறித்து
ஐந்தலைய

ஐந்து தலைகளையுடய
பை

படத்தோடு கூடின
நரகம்

காளிய நாகத்தினுடைய
தலை

தலைமேலே
பாய்ந்தவனே

குதித்தவனே!
உன்னை பல்லாண்டு கூறுதும்

தேவரீருக்கு மங்களாசாஸநம் செய்வோம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ‘‘ஏடு நிலத்தில்’’ என்கிற பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்னும் பாசுரத்தால் தாம் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு வந்துசேர்ந்த கைவல்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி மங்களா சாஸநம் பண்ணுகிறபடியைச் சொல்வது இந்தப்பாசுரம்.

எம்பெருமானே நாங்கள் கைவல்ல புருஷார்த்த ப்ராப்திக்கு ஸாதகமாக ‘‘ஓம், நம:’’ முதலிய சொற்களைச் சொல்லிக்கொண்டு தேவரீரை பஜநம் பண்ணினோம்; தேவரீர் எங்களைக் கடாக்ஷித்து நாங்கள் மீட்சியற்ற கைவல்யத்தை யடைந்து கெட்டுப் போகாதபடி அருள்புரிந்து நல்லபுத்தியை யுண்டாக்கினபடியால் அடியோங்கள் இப்போது திருந்தி தேவரீருக்குப் பல்லாண்டு பாடுகிறவர்களாக ஆய்விட்டோ மென்கிறார்கள்.

எம்பெருமானே! தேவரீருக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட நாள் எந்நாளோ, அந்நாளிலேயே அடியோங்களுடைய குடில் உஜ்ஜீவித்துப் போயிற்று என்றது – நாங்கள் கைவல்யப்ராப்திக்கு ஸாதகாமாக ஓம், நம: என்பதை அநுஸந்தித்து அதனால் யாத்ருச்சிகமாக நல்லபுத்தி பிறந்து குடிகுடியாக உஜ்ஜீவித்தோமென்றபடி.  குடில் – க்ருஹம்; கைச்யாநுஸந்தாநப் பேச்சு.

வில்விழவென்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்ட கண்ணபிரான் அவனுடைய ஆயுதசாலையிலே புகுந்து வில்லையெடுத்து முறித்ததும் தன்னுடைய விஷத்தாலே யமுநாநதியின் ஒரு மடுவைக் கெடுத்துக்கொண்டு எல்லார்க்கும் பயங்கரமாயிருந்த காளியநாகத்தைத் தண்டித்ததும் ப்ரஹித்தம்.

 

English Translation

My Lord!  The day we became your bonded serfs, that very day our entire clan found its refuge and salvation, see! You appeared on that auspicious day in Mathura city, destroyed Kamsa’s arsenal and danced on the head of the five hooded snake, Pallandu to you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top