(5)

(5)

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை

இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு

தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.

 

பதவுரை

அண்டம் குலத்துக்கு அதிபதி ஆகி

அண்ட ஸமூஹங்களுக்கெல்லாம் நியாமகனாய்
அசுரர் இராக்கதரை

அஸூர ராக்ஷஸர்களுடைய
இண்டை குலத்தை

நெருக்கமான கூட்டத்தை
எடுத்து களைந்த

நிர்மூலமாக்கின
இருடீகேசன் தனக்கு

ஹ்ருஷீகேசனான * பகவானுக்கு
தொண்டர் குலத்தில் உள்ளீர்

அடியவராயிருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே!

(ஐச்வர்யார்த்திகளே!) நீங்கள்

பண்டை குலத்தை தவிர்ந்து

(பிரயோஜநாந்தரத்தை விரும்பிக்கிடந்தமையாகிற) பழைய தன்மையை நீக்கிக் கொண்டு
வந்து

எங்களோடு சேர்ந்து
அடிதொழுது

பகவானுடைய திருவருடிகளை ஸேவித்து
ஆயிரம் நாமம் சொல்லி

எல்லாத் திருநாமங்களையும் அநுஸ்ந்தித்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மின்

எப்போதும் மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை அழைக்கிறார்.  அவர்கள் இரு வகைப்படுவர்; நெடுநாளாக இருந்து கைதப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய விரும்புகிறவர்கள் ஒரு வகுப்பு; நெடுநாள் தரித்ரராகவேயிருந்து புதிதாகச் செல்வமுடைய விரும்புகிறவர்கள் மற்றொரு வகுப்பு.  (முதல் வகுப்பினர் – ப்ரஷ்டைச்வர்யகாமர்களென்றும் இரண்டாம் வகுப்பினர் அபூர்வை ச்வர்யகாமர்களென்றும் சொல்லப்படுவர்.) இவ்விரு வகுப்பினரையும் இப்பாட்டில் அழைக்கிறார்.  இவ்வர்த்தம் இப்பாட்டில் எங்ஙனே தெரிகின்றது என்றால்; கேண்மின்; -‘‘அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலதிலுள்ளீர்!’’ என்றும், ‘‘அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தை யெடுத்துக் களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்!’’ என்றும் விளியை இரண்டாகப் பகுத்துக்கொள்க.  அண்டங்களுக்கு அதிபதியாயிருக்கை ஐச்வரியத்துக்கு முடிவெல்லையாய் இருப்பதால், புதிதான ஐச்வரியத்தைப் பெற விரும்புகின்ற அதிகாரிகள் அப்படிப்பட்ட அண்டாதிபதித்வத்தைப் பெற விரும்பி அந்த விருப்பம் வெளிப்படும்படி ‘‘அண்டாதிபதயே நம; அண்டாதி பதயே நம:’’ என்று எப்போதும் உருப்போடுவர்கள்! அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது முதல்விளியால் விளங்கும் ஏற்கனவேயிருந்த செல்வத்தை அஸுரராக்ஷஸாதிகள் போன்ற சத்துருக்கள் அபஹரித்துக் கொண்டதனால் அச்செல்வத்தை மறுபடியும் ஸம்பாதித்துக்கொள்ள விரும்பும் அவர்கள் அந்த விருப்பம் வெளிப்படும்படி ‘‘அஸுரசத்ரவே நம:, அஸுரசத்ரவே நம: என்று உருப்போடுவார்கள்.  அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது இரண்டாம் விளியால் விளங்கும்.

ஆகவிப்படி இருவகை அதிகாரிகளையும் அழைத்து ‘‘அந்தோ! நீங்கள் ஸ்வயம்ப்ரயோஜநமாக ஸஹஸ்ரநாமங்களையும் (வாயாரச் சொல்லி ஆநந்திக்கலாமாயிருக்க, அதைவிட்டு, ‘அண்டாதிபதி, அஸுரசத்ரு:’என்ற இரண்டு நாமங்களை மாத்திரம் அற்பபலனுக்கான உருப்போட்டுக்கொண்டிருக்கிறீர்களோ, இது தகாது; இனி ஆயிரநாமங்களையும் அநந்ய்ப்ரயோஜநமாக அநுஸந்தித்து எங்களுடைய கோஷ்டியிலே சேர்ந்து மங்களாசாஸநம்பண்ண வாருங்கள் –  என்றழைத்தாராயிற்று.

அண்டமாவது – உலகவுருண்டை; அது அளவற்றதாகையாலே அண்டக்குலமென்கிறது அதுக்கு அதிபதியென்று எம்பெருமானைச் சொல்வது கருத்துடன் கூடியதாகும்.  உன்னைப் போலே நாங்களும் அண்டாதிபதியாக வேணுமென்று தெரிவித்துக் கொண்டபடி.

இண்டைக்குலம் –  நெருக்கமான கூட்டம் என்றபடி.  ‘இண்டக்குலம்’ என்று பாடமாகில், ‘‘இண்டர் –  குலம்’’ என்று பிரியும்.  அஸுரராக்ஷஸர்களாகிற சண்டாளருடைய கூட்டத்தை என்றபடி.  இருடீகேசன் –  ஸ்ருஷீகேசன்; இந்திரியங்களை அடக்கியாள்பவன் என்கை.  தொண்டர் + குலம் : தொண்டர்க்குலம்.

English Translation

Asseting his supremacy over all creation, as Hrisikesa, he destroyed the clannish Asuras and Rakshasas.  O Devotees, revere his feet, chanting the thousand names.  Give up your old connections and ways and sing ‘Many thousands of years Pallandu’.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top