(572)
போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே
பதவுரை
| வலம்புரியே! |
– |
வலம்புரிச்சங்கே!, |
| போய் |
– |
வெகுதூரம் வழிநடந்துபோய் |
| தீர்த்தம் |
– |
கங்கை முதலிய தீர்த்தங்களிலே |
| ஆடாதே |
– |
நீராடுகையாகிற கஷ்டங்கள்பட வேண்டாமல் |
| நின்ற |
– |
(நாரதசாபத்தாலே மரமாய்நின்ற) |
| புணர் மருதம் |
– |
இரட்டைமருதமரத்தை |
| சாய்த்து ஈர்த்தான் |
– |
முறித்துத் தள்ளின கண்ணபிரானுடைய |
| கைத்தலத்து ஏறி |
– |
திருக்கைத்தலத்தின் மீதேறி |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இந்நிலவுலகத்தின் புண்யதீர்த்தங்களிற் படித்து குடைந்தாடவேணுடமென்னும் விருப்பமில்லாதாரில்லை; அங்ஙன் விருப்புற்றாரெல்லாரும் ஆயிரக்காதம் ஐங்நூறுகாதம் வழிநடந்துபோய் ஒருகுளத்திலும் குட்டையிலும் முழுக்கிட்டு வருவர்கள்; ஒரு தடவை புண்யதீர்த்தத்திற் பாய்ந்தாடுவதற்கு எல்லாரும் படாப்பாடுகள் படாநிற்க; பாஞ்சசன்னியமே! நீ அப்படிப்பட்ட வருத்தமொன்றும் படாமல் எம்பெருமானுடைய திருக்கைத்தலத்திலேயே எளிதாகக் குடியிருந்துகொண்டு அவனுடைய வாயமுதமாகிற லோகோத்தரமான புண்யதீர்த்தத்திலே ஸர்வகாலமும் அவகாஹித்திருக்கின்றாயே!, உனது அத்ருஷ்டமே அத்ருஷ்டம் – என்று கொண்டாடுகின்றாள்.
“வலம்புரியே! (நீ மற்றவர்களைப்போல்) போய் தீர்த்தமாடாதே – செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தம் பாய்ந்தாடவல்லாய்“ என்று அந்வயக்ரமம். சேய்த்தீர்த்தமாய் நின்ற என்ற அட்மொழி செங்கண்மாலுக்கு மாகலாம், செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தத்துக்குமாகலாம். சேய்த்தீர்த்தம் என்றது – நெடுந்தூரத்திலுள்ள தீர்த்தமென்றபடியாய், அதனால் அருமை காட்டப்பட்டதாய், அதனால் மிக்கசிறப்பு காட்டப்பட்டதாமென்க.
English Translation
O Great Conch! Forever in the company of the Lord, you do not go miles to take the holy dip. You are bathed in the spout of the Lord’s lips, –the Lord of the lotus eyes who uprooted the Marudu trees.
