(567)

(567)

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

பதவுரை

ஆழி வெண்சங்கை

கம்பீரமாய் வெளுத்திராநின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே!
மருப்பு ஓசித்த மாதவன்தன்

(குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ணபிரானுடைய
வாய்

திருஅதரத்தினுடைய
சுவையும்

ரஸத்தையும்
நாற்றமும்

பரிமளத்தையும்
விரும்புற்று

ஆசையோடே
கேட்கின்றேன்

(உன்னைக்) கேட்கிறேன்.
திருபவளம் செம்வாய்தான்

(அப்பெருமானுடைய) அழகியபவளம் போன்ற சிவந்த திருவதரமானது
கருப்பூரம்

பச்சைக்கற்பூரம் போல்
நாறுமோ?

பரிமளிக்குமோ? (அல்லது)
கலம்பூ

தாமரைப்பூப்போலே
நாறுமோ?

பரிமளிக்குமோ?
தித்தித்திருக்குமோ

மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
சொல்

இன்னபடியிருக்குமென்று எனக்குச் சொல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கம்பீரமான ஹ்ருதயத்தையும் பரமசுத்தஸ்வபாவத்தை யுமுடைய சங்கே! உன்னை ஆசையோடு ஒருவிஷயம் கேட்கிறேன், சொல்லவேணும்; உனக்குத் தெரியாத அம்ஸித்தைப்பற்றி நான் கேட்கப்போகிறதாக நினைக்கவேண்டா, கண்ணபிரானது திருவதரத்தில் ஊறுகின்ற அமுதத்தின் ரஸபரிமங்களைக் குறித்துக் கேட்கிறேனித்தனையல்லது வேறிலை; அவ்வமுதமானது பரிமளத்திலே பச்சைக் கருட்பூரத்தை ஒத்திருக்குமோ, அல்லது தாமரைப்பூவை ஒத்திருக்குமோ? ரஸத்தில் த்ருஷ்டாந்தமாக எடுத்துக் குறிப்பிடக்கூடியவஸ்து யாதென்றும் எனக்கு ஸ்புரிக்கவில்லை; விலக்ஷணமான தித்திப்பை உடையதாயிருக்குமோ? எனக்குத் தெரியச் சொல்லவேணும் என்கிறாள்.

“கருப்பூரம் நாறுமோ“, “கமலப்பூநாறுமோ“ என்ற இரண்டிடத்திலும் உபமவுருபு தொக்கிக்கிடக்கிறது; கரும்பூரம்போல் நாறுமோ கமலப்பூப்போல் நாறுமோ என விரிக்க.

சுவையும் நாற்றமும் – வாயினுடைய பரிமளத்தையும் வாயமுதத்தினுடைய ரஸத்தையும் என்க. ஆழிவெண்சங்கே = ஆழி என்று கடலுக்கும் பேராதலால், கடலில் நின்று தோன்றிய வெண்சங்கே! என்றுரைத்தலுமாம். (“வெண்சங்கே!.) கைவிடாதே அநுபவியாநிற்கச் செய்தேயும் உடம்பு வெளுக்கும்படியிறே இவனுடைய ஆற்றாமை“ என்ற வியாக்யான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்மின், சங்குக்கு வெண்மை இயற்கைக்குணமன்றுபோலும்,

English Translation

Tell me, O White Conch, I am eager to know. Does the mouth of our killer-of-the-rutted-tusker Lord Madavan bear the aroma of camphor, or the fragrance of lotus? Are his auspicious lips sweet to taste?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top