(557)
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்
பதவுரை
| நாளை |
– |
நாளைக்கு |
| வதுவை மணம் என்று நாள் இட்டு |
– |
விவாஹமஹோத் ஸவமென்று முஹூர்த்தம் நிர்ணயித்து |
| பாளை |
– |
கழுகு பரிசு உடைபந்தல் கீழ் |
|
பாளைகளோடு கூடின பாக்கு மாங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணபந்தலின் கீழே |
||
| கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காலை |
– |
நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள்பூண்ட ஒரு யுவாவானவன் |
| புகுத |
– |
பிரவேசிக்க |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நாளையதினம் கண்ணாபிரானுக்கும் ஆண்டாளுக்கும் கல்யாணமஹோத்ஸவம்“ என்பதாக முஹூர்த்த நிர்ணயம்பண்ணின பின்பு, விவாஹத்தின். முன்னாளிற் செய்யவேண்டுஞ சடங்குகள் செய்தற்காகக் கண்ணபிரான் அலங்காரப் பந்தலின்கீழ் எழுந்தருளக் கனாக்கண்டேனென்கிறாள்.
‘பத்துநாள் கழிந்தபின் முஹூர்த்தம்‘ என்றுநாளிட்டால் அத்தனை விளம்பம் ஹிக்க முடியாதாகையாலும், ‘இன்றைக்கே முஹூர்த்தம்‘ என்று நாளிட்டால் அதிக ஸந்தோஷமும் தாங்க்வொண்ணாமற் கேடுவிளையுமாதலாலும் * நாளை வதுவைமணமென்று நாளிட்டபடி. துக்கம் அஸஹ்மாயிருக்குமென்பது இதிஹாஸஸித்தம்த. வதுவை – கலியாணம், மணம் – உத்ஸவம்.
கல்யாணப்பந்தல்களில் பாளைகளோடு கூடின பரக்குமாரங்களைக் கொண்டு வந்துநாட்டி அலங்காரம் செய்தல் முறைமையென்க. பரிசு என்று அலங்காரத்துக்கும் பெருமைக்கும் ஸம்மானத்துக்கும்பேர். பாளைகள் நிறைந்த கமுகளாகிய அலங்காரம் அணிந்தபந்தலின்கீழ் என்கை. “பந்தற்கீழ்“ என்றும் “பந்தர்க்கீழ்“ என்றும் பாடபேதங்கள். பந்தல், பந்தர் – கடைப்போலி. கோளரி – மிடுக்கையுடைத்தான சிங்கம், “கோளரி மாதவன் கோவிந்தம்“ என்று அடுக்கியருப்பதற்கிணங்கப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ள ரஸமயமான அர்த்தவிசேஷம் ரஸிகர்களின் நெஞ்சையுருக்கும், கோளரி – கண்ணபிரான் கல்யாணப்பந்தலுக்கு நடந்துவரும்போது நாட்டுப் புறத்துப்பையல்களைப் போலல்லாமல் தன்பெருமையெல்லாம் தோற்ற மிடுக்கோடே நடந்தபடியைச் சொல்லுகிறது. “அப்ரமேயம்ஹிதத்தேஜ,“ என்னும்படியான மிடுக்கு நடையிலே தோன்றுமே. மாதவன் – பரமரஸிகன் என்று தோன்றுமாறு நடந்துவந்தபடியைச் சொல்லுகிறது. மா – பிராட்டிக்கு, தவன் – கொழுநன், என்றால் பரமாஸிகன் என்று தானே பொருள்படும். (கோவிந்தன்) “***“ (ச்ரேயர்மஸிபஹுவிக்நாநி) என்றபடி நற்காரியங்களுக்கு இடையூறுகள் மிடைதருமாதலால் இந்தவிவாஹ மஹோத்ஸவத்துக்கு யாரால் என்ற இடையூறு நேர்ந்துபிடுமோ என்று அஞ்சி ஒருவரையும் விரோதித்துக்கொள்ளாமல் எல்லாரும் கையாளாய் முகங்கொடுத்துக்கொண்டு வந்தபடியைச் சொல்லுகிறது. கோவிந்தனென்றாலும் ஸர்வஸுலபனென்றாலும் பாயாயமென்று கொண்மின். காளை – நல்ல இளைமைப்பருவம் வாய்ந்தவனென்கை, காளையே எருது பாலைக்கதிபன் நல்லினையோன் பேராம“ என்பது நிகண்டு.
English Translation
I had a dream O sister! Under a canopy of Areca fronds, he stood like a lion called Madavan alias Govindan. They fixed our wedding for the morrow.
