(549)
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்
பதவுரை
| மெல்நடை அன்னம் |
– |
மந்தகதியுடைய அன்னப்பறவைகள் |
|
பரந்து எங்கும் பரவி |
||
| விளையாடும் |
– |
விளையாடுவதற்கு இருப்பிடமான |
| வில்லிபுத்தூர் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரிலே |
| உறைவான் தன் |
– |
எழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய |
| பொன்அடி |
– |
அழகிய திருவடிகளை |
| காண்பது ஓர் ஆசையினால் |
– |
காணவேணுமென்றுண்டான ஆசையினாலே |
| பொரு கயல் என்கண்இணை |
– |
சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற எனது கண்கள் |
|
துஞ்சா உறங்குகின்றனவில்லை |
||
| குயிலே |
– |
ஓ குயிலே!’ |
| உலகு அளந்தான் |
– |
(த்ரிவிக்ரமனாய்) உலகங்களை அளந்த பெருமான் |
| வர இங்கே |
– |
வரும்படி |
|
கூவாய் கூவு’ |
||
|
(அப்படி கூவுவாயாகில்) |
||
| இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என்கோலம் கிளியை |
– |
கன்ன லமுதையும் பாலமுதையும் ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை |
| உன்னோடு |
– |
உன்னோடே |
| தோழமை கொள்ளுவன் |
– |
ஸ்நேஹப்படுத்தி வைப்பேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பரமபதத்திலே நித்யஸூரிகளுக்கு காட்சிகொடுத்துக் கொண்டு இருக்கக் கடவனான எம்பெருமான் அவ்விருப்பை விட்டு என்னைப் போன்ற வஸ்துக்களைப் பார்த்துப்கொண்டு போது போக்துவதற்காகவன்றோ ஸ்ரீவில்லிபுத்தூரிரிலே எழுந்தருளினான்’ என்னுடைய நடைபோன்ற நடை படைத்த அன்னப்பறவைகள் நாற்புறமும் நிறைந்து விளையாடப்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரிரில் அவன் எழுந்தருளியிருந்து தன் கண்களின் பட்டினியை ஒருவாறு தீர்த்துக்கொண்டான்; அது போல என்கண்களின் பட்டினியும் தீரவேண்டாவோ? அவனுடைய கண்களானவை என்னை ஸாக்ஷாத்தாகப் பாராமல் என்னோடுஸஜாதீயங்களான வஸ்துக்களைப் பார்த்தாலுங்கூட பட்டினி தீரும்படியாயிருக்கின்றன; என்னுடைய கண்களோவென்றால் அப்படிக்கன்றி அவனுடைய திருவடிகளையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கவேணுமென்று ஆவல்கொண்டு அந்த ஆவல் நிறைவேறப்பெறாமையினாலே ஒரு க்ஷணமும் துஞ்சுகின்றனவில்லையென்கிறாள்- முன்னடிகளில்.
இவ்விடத்திலே நம்பிள்ளைக்கும் நஞ்சீயர்க்கும் ஒருஸம்வாதமுண்டு’ அதாலன் – “கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தனென்யதோர் தோணிபெறாதுழல்கின்றேன்’ என்று சொன்னது பொருந்தும்’ ஸ்ரீவைகுண்டம் ஆண்டாளுக்கு எட்டாத நிலமாகையாலே அவ்வைகுந்தனைப் பெறுவதற்கு இயலாமல் வருந்துவது தகும்’ இப்பாட்டிலோ வென்றால் ‘வில்லிபுத்தூரிருன்றவான்றன் பொன்னடி காண்யதோ ராசையினால்” என்கிறாள்’ அவ்வூரிலேயே பிறந்து வளருமாவளான இவளுக்கு அவ்வெம்பெருமானுடைய பொன்னடியைக்காண்பதில் என்ன அருமை? காதமா இருகாதமா?’ நாலடியளவிலேயிருக்கின்ற கோயிலுனுள்ளே நினைத்தபோதெல்லாம் போய்ப்புகுந்து யதேஷ்டமாகப்பறிமாறலாமன்றோ! ஆயிருக்க, ஸ்ரீவில்லிபுத்தூரிரெம்பெருமானுடைய திருவடிகளை ஸேவிக்கப்பெறாமல் என்கண்கள் விடாய்த்துப்போயினவென்று இவள் சொல்லுவது எப்படி பொருந்தும்?” என்று நஞ்சீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பஞ்செய்ய அதற்கு நஞ்சீயர் உத்தரம் அருளிச்செய்ததென்னனில்’ “நீர்கேட்டது அழகியதே’ ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரிரிலேயே பிறந்து வளருமவளாயினும் வில்லிபுத்தூரிருறைவானுடைய ஸந்நிதியிலே சென்று புகுவது அவளுக்கு எளிதாகக் கைகூடுமதன்று’ நாமெல்லாம் கோவிலுக்குப் போய்வந்தால் சித்தவிகாரமென்பது சிறிதுமில்லாமல் கல்போலவேபோய்க் கல்போலவே திரும்பிவருகிறோம்’ குறிபழியமாட்டோம்’ ஆண்டாளுடைய ப்ரக்ருதி அப்படிப்பட்டதல்ல காணும்’ உள்ளே புகுந்தவாறே அவ்வெம்பெருமானுடைய சீலகுணத்தை அநுஸந்தித்து அதிலே ஆழங்காற்பட்டு பரதாழ்வானைப்போலே மோஹிப்பவளாய்த்து இப்படிப்பட்ட ப்ரக்ருதியைத் தெரிந்துகொண்டிருக்கும் இவளது உறவினர் இவளைக் கோவில்வழிநாடவொட்டார்கள். ‘குழையும் வாண்முகத்தேழையைத் துலைவில்லிமங்கலங்கொண்டுபுக்கு, இழைகொள்சோதிச் செந்தாமரைக் கட்பிரானிருந்தமைக்காட்டினீர்;’ என்றபாசுரம் உமக்குத் தெரியாததன்றோ’ இவளைக் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போய்ப் பெருமாளை ஸேவிக்கச் செய்து அதனால் சித்தவிகாரத்தையுண்டாக்கி ‘அநியாயமாகக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துக்கொண்டுபோய் வலையிலகப்படுத்தி இழந்தீர்களே!” என்று நாலுபோ;வசைகூறும்படியாவதிற் காட்டில் இவளைக் கோவில்வழி நோக்கவொட்டாமற்செய்வதே க்ஷேமவென்று நினைத்துத் தாய்தந்தையர் இவளை அகத்தினுள்ளேயே அடக்கி வைத்திருப்பார்களாகையாலே ‘வில்லிபுத்தூரிருறைவான்றன் பொன்னடிகாண்பதோராசையினால் என்பொருகயற் கண்ணிணை துஞ்சா’ என்று சொன்னது பொருத்தமுடையதுதான்” என்று அருளிச்செய்தாராம்.
வில்லிபுத்தூரிருறைவான்றன்போன்னடி- பரமபதநாதனுடைய பொன்னடிகளை ஸேவிக்கப் பெறாமைபற்றி இவளுக்கு வருத்தமில்லை. அது தூரிரஸ்தமாகையாலே கிடைக்கப்பெற்றதில்லையென்று ஆறியிருக்கலாம்’ மீனுக்குத் தண்ணீர் வார்ப்பதுபோலல்லாமல் விடாய்த்தவர்கட்கெல்லாம் தண்ணீர்வார்ப்பதுபோல, காணவாசைப்பட்டவர்கட்கெல்லாம் காட்சி தருவதற்கென்றே வந்தருளினவிடத்தில் காணப்பெறாதொழிந்தால் பாரிதாபம் பேச்சுக்குநிலமாகுமோ?.
இவள் இப்படிபாரிதாபம்தோற்றச் சொன்னதைக்கேட்ட குயில் ‘அம்மா! நீ பாரிதபிப்பது உண்மைதான்’ இதற்கு நான் என்னசெய்யக்கூடும்? உன்னை நான் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போகக்கூடுமோ? என்னால் செய்யக்கூடியது ஏதேனுமுண்டாகில் சொல்லிக்காண்” என்ன’ அவ்வெம்பெருமான் இங்கே எழுந்தருளும்படியாகக் கூவாய் என்றாள்’ அதற்குக் குயில் சொல்லிற்று.
‘அம்மா! நீ இப்படியும் ஒரு ஆசை கொள்ளலாமா? அவ்வெம்பெருமான் இங்கே வருவதென்றால் அது லகுவான காரியமோ? ‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலாவூழியூத் தவஞ்செய்தார் வெள்கிநிற்ப’ என்றும் (ஸமாஹிதைஸ்ஸாது ஸநந்தநாதிபிஸ் ஸுதுர்லபம் – வரதராஜஸ்தவம்) என்றும் உள்ளப்ரமாணங்கள் உனக்குத் தெரியாமையில்லையே’ பெருகப்பெருத்தவர்களெல்லாம் அவன்வரவை விரும்பிப்பெறாமல் வெள்கியொழிந்தனர் என்னாநிற்க, உன்பக்கலிலேயோ அவன்வரப்போகிறான்?” என்றது’ அதற்குமேல் அவள் “உலகளந்தான் வரக்கூவாய்” என்கிறாள். வஸிஸ்டசண்டான விபாகம் பண்ணாமலும் குணாகுணா நிரூபணம் பண்ணாமலும் எல்லாருடைய இருப்பிடத்திற்கும் ஸங்கோசமின்றிச் சென்றவனாய்த்து அவன்’ உலகளந்தவன்றோ? தவம் செய்தார் வெள்கிநிற்கச் செய்தேயும் விண்ணுளார்வியப்பவந்து ஆனைக்கு அருளை யீந்தவனன்றோ; ???????????????????????? னாயிருக்கச்செய்தேயும் ????????????????????????? னன்றோ ஆகையாலே தவறாமல் வந்திடுவன்’ கூவு என்கிறாள்.
குயிலே! நெஞ்சு உலரும்படி கூவுகைக்கு ப்ரயோஜநம் ஒன்றுமில்லையோ? என்று கேட்பாயாகில், ப்ரயோஜநமும் செய்துவைக்கிறேன், பெறுவாய் என்கிறாள் – இன்னடிசிலோடு இத்யாதியால். குஹப்பெருமாள் சக்ரவர்த்தித்திரு மகனார்க்குச் செய்த பெருநன்றிக்கு அவர் இளையபெருமாளுடைய தோழமையைக் கைம்மாறகச் செய்து தந்தாரென்று ப்ரஸ்ஸித்தம், “தஸ்மை ஸேளமித்ரிமை த்ரிமயமுபக்ருதவா நாதரம் நாவிகாய” என்றான் முராரியும். அப்படிபோல் ஆண்டாளும் தான் மிக்க அன்புடன் பாராட்டி வளர்த்த பைங்கிளியை அக்குயிலோடு தோழமைகொள்விப்பதையே பெருத்த கைம்மாறாகக் கூறுகின்றன ளென்க. கொள்ளுவன் ஸ்ரீ கொள்விப்பவன். ….. ….. ….. … (ரு)
English Translation
The Lord lives in Villiputtur, where swans in pairs gracefully flap and play. Desirous of seeing his golden feet, my warring fish-like eyes have not closed. O Koel, go and call the Lord who strode the Earth! I shall be friend you to my parrot, brought up milk and sweet morsel.
