(3662)

(3662)

கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை,

ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும்,

பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,

நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே.

 

பதவுரை

வைகலும் கூடும் கொல்

(நமது மநொரதம்) எப்போதும் நிறைவேறப்பெறுமோ?

கோவிந்தனை

ஆயர்தலைவனும்

மதுசூதனை

மதுகைடபஹந்தாவும்

ஆடு பறவை மிசை கண்டு

வெற்றியையுடைய கருடன் மேலே கண்டு

கைதொழுது

அஞ்ஜலிபண்ணி அவ்வளவேயல்லாமல்

அவன் உறையும்

அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமாய்,

பாடும் பெரு புகழ் நால் மறை ஜந்து வேள்வி ஆறு அங்கம் பன்னினர்வாழ்

உரக்கப்பாடப்படுகிற மிக்க புகழையுடைய நான்கு வேதங்களென்ன, பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன, சீவீக்ஷி முதலான ஆறங்கங்களென்ன இவற்றிலே மிக்க பரிசய முள்ளவர்கள் வாழுமிடமாய்

நீடு பொழில்

பெரிய சோலைகளையுடையதான

திருவாறன் விளை

திருவாறன் விளைப்பதியை

நிச்சலும் தொழ வாய்க்கும் கொல்

எப்போதும் தொழுது கொண்டேயிருக்கும் படியான பாக்கியம் வாய்க்குமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாட்டின் முடிவிலே “வாய்க்குங்கொல் நிச்சலும்” என்றிருக்கச் செய்தேயும் தொடக்கத்தில் “கூடுங்கொல் வைகலும்” என்றது ஆதராதிகசயத்கையும் விரைவுமிகுதியையுங் காட்டும். அங்குறையும் பெருமான்பக்கலிலே விளங்கும் ஆச்ரிதவாத்ஸல்யத்தைக் கண்டு கோவிந்தனை என்றார்; விரோதிநிரஸனமிடுக்கைக் கண்டு ‘மதுசூதனைக் கோளரியை’ என்றார்.

“ஆடும் பறவை மிசைக்கண்டு” என்ற சொல்நயத்தை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும் விசேஷார்த்தம்-திருவாறன்விளையை உத்தேச்யமாகக் கொண்டு எம்பெருமானை அங்கே காணவேணுமென்று நாம் அவ்விடந்தேடிச் சென்றால், அவன் திருநகரியை உத்தேச்யமாகக்கோண்டு இங்கே நம்மைக் காணவேணுமென்று ஆடும் பறவைமிசையேறி வருவனே; அன்னவனை நடுவழியிலே கண்டு—என்று.

கைதொழுதன்றி—கைதொழுவது மாத்திரமேயல்லாமல் என்றபடி வேதாத்யயந பரர்களும் பஞ்சமஹாயஜ்ஞபராயணர்களும் வாழுமிடமென்கிறது மூன்றமடி.

 

English Translation

Oh, when will worship him instead of seeing him ride away on his Garuda?  He is Govinda, Madhusudana, Naraharl, residing in Tiruvaranvilai, -surrounded by gardens, -famed for the four Vedas, the five sacrifices and the six Angas

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top