(3647)

(3647)

இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம்

தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே

அல்லித் துழாயலங் கலணி மார்ப!என் அச்சுதனே,

வல்லதோர் வண்ணம் சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே.

 

பதவுரை

இதனில் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம்

இதிற்காட்டில் வேறு நுட்பமில்லை யென்னும்படி

தொல்லை நல்நூலில் சொன்ன

அநாதியான வேதசாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட

உருவும் அருவும் நீயே

அசித்தும் சித்தும் நீயே;

அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே

பூந்தாரையுடைத்தான திருத்துழாய் மாலை யணிந்த திருமார்பையுடைய என் அச்சுதனே!

வல்லது ஒர் வண்ணம் சொன்னால்

கூடுமானவரையில் (யார் எது) சொன்னாலும்

உனக்கு அதுவே வண்ணம் ஆம்

சொன்னவவ்வளவே உனக்கு வடிவாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

ஸூக்ஷ்மசிதசித்விசிஷ்டப்ரஹமம், ஸ்தூலசிதசித்விசிஷ்டப்ரஹ்மம் என வேதாந்திகள் வழங்குவர்கள். காரணாவஸ்த ப்ரஹ்மத்திற்கு ஸூக்ஷ்மசிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமென்று பெயர்; “ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத்” என்று ஒதப்பட்ட நிலை காரணாவஸ்த ஸூக்ஷ்மநிலை த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமநாம் விருக்ஷ்ம பரிஷஸ்வஜாதே, த்யோரந்ய: பிப்பலம் ஸ்வாத்வத்தி அநச்நந் அந்ய: அபிசாகசீதி இத்யாதிகளால ஓதப்பட்ட நிலை கார்யாவஸ்த ஸ்தூலநிலை ஆக இவ்விரண்டு நிலைமைகளும் ஒரு ப்ராஹ்மத்துக்கேயாதலால் “தொல்லைநன்னூலிற் சொன்ன உருவு மருவும் நீயே” என்கிறது. தொல்லை நன்னூலென்கிறது ப்ரமாணச்ரேஷ்டமான வேதத்தை.

ஈற்றடியை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள்; -வேதங்களும் ஸநகாதி யோகிகளும் உன்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளைப் பேசப் புகுந்தால் ஏதோ சில பாகம் பேசினார்கள் என்று கொள்ளலாமே தவிர, எல்லாம் பேசி முடித்திட்டார் களென்பதில்லை; அவர்களும் பேசாததாய் இன்;னமும் பேசவேண்டுவது அளவு கடந்திருக்குமென்கை. அன்றிக்கே, உனக்கு நல்லராய் உன் குணங்களிலே யீடுபட்டிருக்குமவர்கள உன்னை ஏதேனுமொருபடி பேசினால் அதையே தன்படியாக நினைத்திருக்குமவன் என்றதாகவுமாம். அன்பர்கள் பேசுகிறபடிக்கெல்லாம் தான் இணங்கியிருக்குமவனென்பது பரம தாற்பரியம்.

 

English Translation

You are the form and the formless spoken of in the Vedas, the subtle inseparable from the gross reality.  O My Achyuta with a Tulasi garland over your chest!  Whatever one attributes to you, that you are indeed!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top