(3646)

(3646)

என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா,

துன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும்

உன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே,

உன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே.

 

பதவுரை

என் கண்ணா

எனது கண்ண பிரானே!

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய்

என்ன் ஸ்வபாவங்களோடே என்ன ப்ரகாரத்திலே நின்றாய்;

துன்னு கரம் சரணம் முதல் ஆக

நெருங்கிய கரசரணாதிகளான

எல்லா உறுப்பும்

எல்லாக்கரணங்களும்

உன்னு

விரும்பத்தக்க

சுவை ஒளி ஊறு நாற்றம் முற்றும் நீயே

ரஸம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் இவையாகிற ஸகல விஷயங்களும் நீயே;

உன்னை உணர உறில்

இப்படிப்பட்ட வுன்னை நிரூபிக்க நினைக்கில்

நுணுக்கங்கள்  உலப்பு இல்லை

உன்னுடைய நுட்பத்திற்கு முடிவில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

கைகால் முதலான வுறுப்புக்களினால் உலகில் அவரவர்கள் செய்யும் ஸகலகாரியங்களும் உன் ஸங்கல்பத்தாலாமவை. ஜலதத்வத்தின் குணமாகிய சுவையும், தேஜஸ்தத்த்வத்தின் குணமாகிய ரூபமும், வாவுதத்த்வத்தின் குணமாகிய ஸ்பர்சமும், ஆகாச த்த்த்வத்தின் குணமாகிய சப்தமும், பூமிதத்த்வத்தின் குணமாகிய கந்தமும் ஆகிய இந்த ஸகல விஷயங்களும் நீயிட்ட வழக்கு. அதாவது, இப்பொருள்களெல்லாவற்றிலும் நீயே அநுப்ரவேசித்திருந்து அவ்வக் காரியங்களை நிலீவஹித்தருளாநின்றாயென்றபடி. உன்னுடைய பெருமையையும் சிறுமையையும் அநுஸந்திக்கப் புக்கால் உன்னுடைய வைலக்ஷ்ண்யத்துக்கு முடிவில்லை என்றாராயிற்று.

 

English Translation

O My Krishna! you are the hands and feet and all the lirnbs, taste and form and touch; sound and smell too are you. Begin to think, there is no end to your subtle nature. What do these mean?  How do you stand?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top