(3289)
மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்?
ஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட,
பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே.
பதவுரை
|
(அன்னை மீர்) |
– |
தாய்மார்களே! |
|
மருந்து ஆகும் என்று |
– |
நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி |
|
ஓர் மாயம் அலவை சொல் கொண்டு |
– |
வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு |
|
நீர் |
– |
நீங்கள் |
|
கரு சோறும் |
– |
கருஞ்சோற்றையும் |
|
மற்றை செம்சோறும் |
– |
மற்றுள்ள செஞ்சோற்றையும் |
|
களன் |
– |
நாற்சந்தியிலே |
|
இழைத்து |
– |
இடுவதனால் |
|
என் பயன் |
– |
என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;) |
|
உலகு ஏழும் |
– |
ஸப்தலோகங்களையும் |
|
ஒருங்கு ஆக எ |
– |
ஒருகாலே |
|
விழுங்கி |
– |
(பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு |
|
உமிழ்ந்திட்ட |
– |
பிறகு வெளிப்படுத்தின |
|
பெரு தேவன் |
– |
பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய |
|
பேர் |
– |
திருநாமங்களை |
|
சொல்ல கிற்கில் |
– |
(இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால் |
|
இவளை பெறுதிர் |
– |
இவளை இழவாமே பெறுவீர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள். யுக்தாயுக்த நிரூபணம் பண்ணாமல் கண்டபடியே சொல்லுகிறவளுக்கு அலவையென்று பெயர்; இங்கே கட்டுவிச்சியைக் குறிக்கின்ற சொல் இது. பரிஹாரமுறைமை சொல்லவந்து தோன்றினபடியே பிதற்றாநின்ற இக்கட்டுவிச்சியின் சொல்லைநம்பி நீங்கள் க்ஷுத்ரதெய்வங்கள் வந்து ஸந்நிதிபண்ணுமிடமான நாற்சந்தி முதலானவற்றிலே செஞ்சோறு கருஞ்சோறுகளை யிடுவதனால் என்ன பயனுண்டு?
பின்னை என்செய்யவேணுமென்னில்: ஆச்ரிதர் அநாச்ரிதர் என்கிற வாசிபாராமல் ஸகலலோகங்களையும் பிரளயம் விழுங்காதபடி தான் விழுங்கி ரக்ஷித்துஇ ப்ரளயம் கழிந்தவாறே வெளிப்படுத்தின பரதேவதையின் திருநாமம் சொல்லவல்லீர்களாகில்; இவள் உய்யப்
பெறலாம்: வேறுவகையான காரியங்கள் செய்வது இவளை இழப்பதற்கே உறுப்பாமென்றவாறு.
English Translation
Listening to some wierd hag’s worlds, you throw black and red cooked-rice balls on the after, what use? Recite the names of the Lord who in a trice swallowed and made the worlds. You will surely get your daughter back
