……… ………… …………. பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,
நன்னறு வசமற் றாரானும் எய்தாமே,
மன்னும் வறு நிலத்து வாளாங் குகுத்ததுபோல்,
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,
மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப் (2759)
பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி,
முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்தறிவி ரில்லையே? (2760)
பதவுரை
|
கல் நவிலும் காடு அகத்து |
– |
கல் மயமான காட்டினுள்ளே |
|
ஓர் வல்லி |
– |
ஒரு கொடியில் (புஷ்பித்த) |
|
கடி மலரின் |
– |
புதுமலரினுடைய |
|
நல் நறு வாசம் |
– |
நல்ல பரிமளம் |
|
மற்று ஆரானும் எய்தாமே |
– |
யார்க்கும் உபயோகப் படாமல் |
|
மன்னும் வறு நிலத்து ஆங்குவாளா உகுத்த்து போல் |
– |
அந்தசூன்ய ஸ்தலத்திலே வீணாகக் கழிவது போல் |
|
பேதையேன் என்னுடைய பெண்மையும் |
– |
அறிவற்றவளான என்னுடைய ஸ்த்ரீத்வமும் |
|
என் நலனும் |
– |
எது குணங்களும் |
|
என் முலையும் |
– |
எனது முலைகளும் |
|
மலர் மங்கை மன்னும் மைந்தன் |
– |
பூவிற் பிறந்த பெரிய பிராட்டியோடு சேர்ந்த பிரமபுருஷனாயும் |
|
கணபுரத்து பொன்மலை போல் நின்றவன் தன் |
– |
திருகண்ணபுரத்தில் பொன் மலைபோல் நிற்பவனாயுமுள்ள எம்பெருமானுடைய |
|
பொன் அகலம் தோயா எல் |
– |
அழகிய திருமார்பிலே சேர்வதற்கு உறுப்பாகாவிடில் |
|
வாளா இவை என் |
– |
வயாத்தமான இந்த வஸ்துக்கள் எதுக்கு? |
|
(இவை) |
– |
இம்முலைகளானவை |
|
எனக்கே பொறை ஆகி |
– |
எனக்கு ஒருத்திக்கே வீண்பாரமாகி |
|
முன் இருந்து |
– |
கண்ணெதிரே இருந்து கொண்டு |
|
மூக்கின்று |
– |
மேன்மேலும் வீங்கும்போது |
|
மூவாமை காப்பது |
– |
அப்படி வீங்காமல் தடுக்க வல்ல |
|
ஓர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே |
– |
ஒரு சிறந்த மருந்து கண்டறிவாராருமில்லையே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- காமன் செய்கிற ஹிம்ஸை ஒருபுறமிருக்கட்டும், என்னோடு கூடவே பிறந்து என்னை ஹிம்ஸிக்கின்ற இம்முலைகளைத் தண்டிப்பாராருமில்லையேயென்கிறாள். ஒருவரும்புகக்கூடாத காட்டிலே சிறந்ததொரு கொடி தன்னிலே பரிமளோத்தரமான புஷ்பம் புஷ்பித்துக் கமழநின்றால் ஆர்க்கு என்ன பயன்? “கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடுடனாய் நின்று தூங்குகின்றேன்“ (நாச்சியார் திருமொழி) என்றாற் போல, அங்கே புஷ்பித்து அங்கே உதிர்ந்து அங்கே உருமாய்ந்து போகவேண்டியதே அம்மலர்களின் கதி. அதுபோல, எனது தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் திருக்கண்ணபுரத்தெம்பெருமானுடைய ஸம்ச்லேஷத்துக்கு உறுப்பாகாவிடில் இவற்றால் என்ன பயன், மேற்சொன்ன மலர்கள் போல இவையும் நிஷ்பலங்கயெ யன்றோ. எம்பெருமானோடு அணையப்பெறாதே வீணாக வளர்ந்து கிடக்கின்ற இம்முலைகள் எப்போதும் கண்ணெதிரே தோன்றி நின்று மார்புக்கும் பாரமாகி வருத்துகின்றனவே! எதுக்கு இவை விம்மி வீங்கு கின்றன? இம்முலைகள் தொலைந்தொழிய மருந்து தருவாருமில்லையே! என வருந்துகின்றாள்.
பேதையன் – இப்படி ஹிம்ஸை பொறுக்கமுடியாமல் வருத்தமுறுகிற இந்நிலைமையில் முடிந்து பிழைக்கலாமாயினும் “என்றேனு மொருநாள் நமது மநோரதம் ஸித்திக்குமோ“ என்னும் நசையாலே பிராணனைப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கிற சாபல்யம் தோற்றுகிறது. வல்லி – வடசொல். வாசம் – வாஸலை வறுநிலம் – புல்பூண்டு தண்ணீர் ஒன்று மில்லாத மரு காந்தாரம்.
“எனக்கே பொறையாகி“ என்றவிடத்து. “இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி நோக்கத்தக்கது. முன்னிருந்து – பெண்மைக்கு உறுப்பாக முலையிருக்க வேண்டியது அவசியமாகில் முதுகிலே முளைத்தாலாகாதோ? கண்ணெதிரே முளைத்து வீங்கவும் வேணுமோ?
“கொள்ளும்பய னென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்விலெறிந்து என்னழலைத் தீர்வனே“ என்றாள் ஆண்டாள்“ அவள் மெய்யே பெண்ணாய்ப் பிறந்தவளாகையாலே முலைபடைத்துப் படுகிற வருத்தமெல்லாம் தோற்ற அப்படி சொன்னாள், அங்ஙன்ன்றிக்கே திருமங்கையாழ்வார் பாவநாப்ரகர்ஷத்தால் மாத்திரம் பெண்மையை ஏறிட்டுக் கொண்டவராதலால் அவ்வளவு ரோஷங்கொண்டு சொல்லமாட்டாமல் இந்த முலைகள் உள்ளே அடங்கிப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ? என்கிறார்.
