………. ……….. ……… ……….. பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,
பன்னாக ராயன் மடப்பாவை, – பாவைதன் (2744)
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,
தன்னுடைய கொங்கை முகநெரிய, – தான் அவன்றன் (2745)
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே……… (2746)
பதவுரை
|
பூ கங்கை புனல் முன்னம் பரக்கும் நல் நாடன் |
– |
அழகிய கங்காநதியின் தீர்த்தம் முன்னே ப்ரவஹிக்கப்பெற்ற சிறந்த நாட்டுக்குத் தலைவனும் |
|
மின் ஆடும் கொல்நவிலும் நீள்வேல் |
– |
ஒளியையுடையதும் கொலைத் தொழிலைக் கற்றதும் நீண்டதுமான வேலாயுத்த்தைக் கையிலே உடையவனும் |
|
குருக்கள் குலம் மிதலை |
– |
குருராஜ வம்சத்தில் தோன்றினவனும் |
|
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி |
– |
ஒப்பற்ற வெற்றி பொருந்தி |
|
தனஞ்சயனை |
– |
அர்ஜுநனை |
|
பன்னாகராயன் மடம் பாவை |
– |
கௌரவ்ய்னென்னும் ஸர்ப்ப ராஜனுடைய |
|
மடமைபொருந்திய பெண்ணான உலூபி யென்பவள் |
||
|
பாவை தன் மன்னிய நாண் அச்சம் |
– |
ஸ்த்ரீத்வத்திற்குப் பொருந்தின நாண் மடமச்சம் முதலிய குணங்கள் நீங்கப்பெற்று |
|
தன்னுடைய கொங்கை முகம் நெரி |
– |
தனது கொங்கையின் முகம் நெறிக்கப்பெற்று |
|
தான் |
– |
(வெட்கத்தை விட்டுத்) தானாகவே |
|
நயந்து |
– |
ஆசைப்பட்டு |
|
அவன் தன் |
– |
அவ்வர்ஜுநனுடைய |
|
பொன்வரை ஆகம் |
– |
அழகிய மலைபோன்ற மார்பை |
|
தமீஇக் கொண்டு |
– |
ஆலிங்கனஞ் செய்துகொண்டு |
|
தனது நல் நகரம் போய் புக்கு |
– |
தன்னுடைய தழகான ஸ்தாநத்திலே (நாகலோகத்திலே) போய்ச் சேர்ந்து |
|
இனிது வாழ்ந்ததுவும் |
– |
ஆனந்தமாக வாழ்ந்தாளென்பதையும் |
|
முன் உரையில கேட்டு அறிவது இல்லையே |
– |
மஹாபாரத்தில் நீங்கள் கேட்டறிந்த்தில்லையா? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அர்ஜுநன் தீர்த்தயாத்திரையாகச் செல்லுபோது ஸ்நாநஞ் செய்ய கங்கையில் இறங்கி நீராடிக் கரையேறப் புகும்போது உலூபி யென்னும் நாக கன்னிகை இவனைக்கண்டு காம மோஹமடைந்து ரமிக்க விரும்பி இவனைத் தண்ணீரினுள்ளே இழுத்துக்கொண்டு செல்ல இவனும் உள்ளே சென்று நீ யார்? என்னை எதுக்காக இங்கே கொணர்ந்தாய்? என்று கேட்க, அவ்வுலூபி ஐராவத குலத்திற் பிறந்த கௌரவ்யனென்னும் ஸர்ப்பராஜனுடைய பெண் நான், உன்னைக் கண்வாறே மன்மத பாணங்களுக்கு இலக்கானேன், எப்படியாவது நீ என்னை புணர்ந்து மகிழ்விக்கவேணும் என்று வேண்ட அதற்கு அர்ஜுநன் அம்மா நான் இப்போது ஸம்வத்ஸர ப்ரஹ்மாசர்ய வ்ரத்த்தில் நிஷ்டனா யிருக்கின்றேன், ஆகையால் எங்ஙனே புணர்ச்சி செய்வேன்? உனது விருப்பை நிறைவேற்ற வேணுமென்கிற ஆசையும எனக்கு உளது. என்செய்வேன்? என்விரதமும் கெடாமல் உன் விருப்பமும பழுதுபடாமல் காரியமாகும்படியான உபாயத்தை நீயே சொல் என்ன அதற்கு அவ்வுலூபிகை உன் விரத்த்தின் வரலாறு எனக்குத் தெரியும், நான் காம நோயைத் தாங்க முடியாது உன்னைச் சரணமடைகின்றேன், அடைக்கலம் புகுந்தவர்களை கைவிடுதல் அதர்ம்மன்றோ என்னை ரக்ஷிப்பதற்காக நீ புணர்ச்சி செய்வாயாகில் இது உன் விரத்த்தை கெடுக்க மாட்டாது, என்னை கைவிடுவாயாகில் இப்போதே என் உயிர் அற்றொழியும்படிபராய் என்ற மிக்க ஆர்த்தியுடன் சொல்ல அர்ஜுநன் அதற்கிணங்கி அன்றிரவு அவளோடே கலந்திருந்து இராவாந் என்கிற அழகிய ஒரு புத்தரனையும் அவளிடத்திற் பிறப்பித்து மீண்டு சென்றான் என்கிற கதை மஹாபாரத்தில் ஆதிபர்வத்தில் இருநூற்று முப்பத்தினான்காமத்தியாயத்திற் கூறப்பட்டுள்ளது.
குருக்கள் குலமதலை – பரத வம்சத்திற் பிறந்த குரு என்னும் அரசனது மரபில் தோன்றினவர்கள் பாண்டவர்களும் துரியோதநாதியரும். தனஞ்சயன் – அர்ஜுநனுடைய நாமங்கள் பலவற்றுள் ஒன்று.
பந்நகம் என்ற வடசொல் பாம்பு என்று பொருள்படும் பத்-காவாலே ந க –நடவாத்து உரகமாதலால் மார்பாலே ஊர்ந்து செல்வது என்று பொருள் – அச்சொல் இங்குப் பன்னாகமென நீண்டு கிடக்கிறது. ‘பன்னகராயன்‘ என்றே பாடமிருந்தாலும் தளை பிறழாது ஆயினும் பன்னாக ராயனென்றே பாடமாம். பாவை –சித்திரப்பதுமை உவமையாகுபெயரால் ஸ்த்ரீயைக் குறிக்கும். இங்கு பிரநரணம் நோக்கிப் புத்திரியைக் குறித்த்து. பாவைதன் மன்னிய என்றவிடத்துள்ள பாவை என்னுஞ் சொல் ஸ்த்ரீத்வத்தைக் குறிக்கும். நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்று ஸ்த்ரீகளுக்கு உரியகுணங்கள் நான்கு, இவற்றுள் நாணமாவது – தகாத காரியத்தில் மனமொடுங்கி நிற்பது, கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையுமாம். மடமாவது எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல் அச்சமாவது – மிகச்சிறிய காரணத்தினாலும் மனம் நடுங்குதல். பயிர்ப்பாவது – பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக்கொள்வது.
